Thursday, April 10, 2014

எக்ஸாம் (2009, யுகே)



பெயரைக்கேட்டால் ஏதோ சிறுவர்கள் படம் என்று நினைக்க வேண்டாம். 

ஐந்து அல்லது ஆறு பேரை ஒரு இடத்தில் வைத்து ஒரு சுவிட்சுவேசனையும் (Situation) கொடுத்து அதிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் அல்லது ஒரு முடிவுக்கு வருவார்கள் என்பது போல பல படங்கள் உண்டு. உதாரணத்திற்கு ஈவில்டெட் (Evil Dead), கியூப் (Cube), டெவில் (Devil), ரோப் (Rope), 12 ஆங்ரி மென் (12 Angry Men) போன்ற படங்களை சொல்லலாம். பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் ஒரு வீடு அல்லது ஒரு அறையில் 5-6 பேர் என்று கதை அவர்களையே சுற்றி வரும். இந்த வரிசையில் வந்த படம் தான் எக்ஸாம் (Exam).

ஒரு பெரு நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகி (CEO) பொறுப்பிற்கு தேர்வு நடக்கிறது. கடைசி சுற்றுக்கு எட்டு பேர் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்கள் எட்டு பேரும் தேர்வு அறையினுள் நுழைவதில் கதை ஆரம்பிக்கிறது. தேர்வு நடத்தும் அதிகாரி இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை தாள் மட்டும் கொடுத்து கேள்வி என்று எதையும் கொடுக்காமல் தேர்வை ஆரம்பிக்கிறான். 

தேர்வில் சில விதிமுறைகள்

-அந்த வெள்ளைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

-தேர்வு நடத்துபவரிடமோ அல்லது அங்கிருக்கும் காவலாளியிடமோ யாரும் பேசக்கூடாது.

-அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது.

தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள்.

பதிலை எப்படி எழுதுவது என்று எட்டு பேரும் குழம்பி நிற்கின்றனர். மேலே சொன்ன விதிகள் மீறப்பட்டு ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். கடைசியில் எஞ்சியிருப்பவர் யார்? என்பது தான் மீதிக்கதை. 

வித்தியாசமான கதைக்களத்தில் அமைக்கப்பட்ட படம். ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையில் Relax-சாக பார்க்கலாம்.


No comments:

Post a Comment