Wednesday, April 16, 2014

ஒ லே துலாஃபலெ ( 2011, சமேன் )



சமேன் (Samoan) என்ற பெயரில் ஒரு நாடு உள்ளது என்று நம்மில் பலருக்கு தெரியாது. இப்படத்தை பார்ப்பதற்கு முன் எனக்கும் தெரியாது. நியூசிலாந்தில் இருந்தது சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமேன். அந்நாட்டிலிருந்து வெளிவந்த முதல் படம் தான் இது.

கதையில் வரும் நாயகனின் பெயர் சாலி (Saali). பரம்பரை பரம்பரையாக நாட்டாமை போன்ற ஊர்தலைவர் பதவி வகித்து வரும் குடும்பத்தைச்சார்ந்தவன். 

உயரம் குறைவாகவும், நன்றாக பேச தெரியாத சாலியை ஊர் மக்கள் மதிப்பதில்லை. அவனுடைய நிலத்தையும் அபகரித்து விடுகின்றனர். ஊர் இப்படி இருக்க வீட்டில் உள்ள அவனது மகளும் அவனை மதிப்பதில்லை. அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவனது மனைவி வைகா (Vaiga). 

தன் குடும்பத்தை எதிர்த்து சாலியை திருமணம் செய்துகொண்ட அவளை அவளது குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்பார்க்காமல் நடக்கும் சம்பவத்தால் சாலி வாதாட வேண்டி வருகிறது. ஊர் மக்கள் யாரும் அவனுக்கு உதவாத நிலையில் அவன் எப்படி தனது தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவந்தான் என்பதுதான் கதை.



சமேன் மக்களின் கிராமிய வாழ்க்கை மற்றும் அவர்களிடம் புதியமுறை கலாச்சாரம் எப்படி தங்களின் வாழ்க்கைத்தரத்தை பாதிக்கின்றது என்று நம்மால் பார்க்க நேரிடுகிறது. ஒரு நாட்டின் முதல் படம் என்று எந்த ஒரு ஆரவாரமோ, பிரம்மாண்டமோ இல்லாமல் மிகவும் எளிமையான கதையோடு எடுக்கப்பட்ட படம்.


No comments:

Post a Comment