Friday, April 4, 2014

இல் கன்போமிஸ்டா (1979, இத்தாலி)



இத்தாலி என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது பைசா கோபுரம் மற்றும் சாப்பிடும் பீட்சா. ஆனால் இத்தாலிய சினிமா ஐரோப்பா மற்றும் உலக திரையுலகில் ஒரு தனிமுத்திரையை ரொம்ப காலமாக பதித்து வருகிறது. லா டோலே விட்டா (La Dolce Vita), பைசைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves) போன்ற திரைப்படங்கள் உதாரணம். இவ்வரிசையில் உலக திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் படம் தான் இல் கன்போமிஸ்டா (Il conformista).

அல்பட்டோ மரொவியா (Alberto Moravia) எழுதிய நாவலை படமாக எடுத்திருப்பவர் பெர்னாடோ பெட்ரோலுச்சி (Bernardo Bertolucci).

இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தின் (Fascism) பிடியில் இத்தாலி உள்ளது. மார்சிலோ (Marcello) என்பவர் பாசிஸ் ரகசிய காவல்துரையில் உளவாளியாக இருக்கின்றான். இடதுசாரி சிந்தனை உள்ள தனது கல்லூரி காலத்தின் பேராசிரியர் குவாடிரியை (Quadri) கொலை செய்ய மார்சிலோவுக்கு கட்டளை இடப்படுகிறது.

Flashback மற்றும் நிகழ்காலத்தில் மாறி மாறி சொல்லப்படும் கதையில் மார்சிலோ சிறுவயதில்பட்ட பாலியல் துன்பங்கள், திருமண பற்றிய அவனின் அபிப்ராயம், கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில் அவன் கொண்ட நம்பிக்கை, பாசிஸம் கொள்கையில் அவனின் பிடிப்பு என்று ஒரு மனோநிலை ஆராய்ச்சியையே நடத்தி விடுகிறார் இயக்குனர்.

கதை இப்படி முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்க கதை படமாக்கப்பட்ட விதமோ அதிரிபுதிரி. கோணலான கேமரா கோணங்கள், வெளிச்சம்-நிழலின் விளையாட்டு, நிறங்கள் பயன்படுத்திய விதத்தில் புதுமையகவும் அதே போல் மிகவும் நேர்த்தியாக படம் எடுக்கப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட சின்னச்சின்ன காட்சிகள் படத்தை மெருகூட்டுகிறது. உலக சினிமாவை நேசிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment