Showing posts with label Tamil Writing 2017. Show all posts
Showing posts with label Tamil Writing 2017. Show all posts

Tuesday, July 4, 2017

28 மார்ச் – 2018



இரவு 2:30 AM

சுவற்றில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று இந்திய நேரம் மற்றொன்று ஜப்பான் நேரம். Cellphoneனின் தொடர் சிலுங்கலில் கண்விழித்தார் ராம்சுந்தர். அருகில் அவரது மனைவி தூக்கம் கலைந்த நிலையில்,

”யாரு phone-ல”

ராம்சுந்தர், “சரண் தான் கூப்பிட்டிருக்கான். எடுக்கறதுக்குள்ள cut-ஆயிடுச்சி”

கடிகாரத்தை பார்த்த ராதா, “மணி ரெண்டரை, அங்க கால ஆறு. இவ்வளவு lateஆ கூப்பிடமாட்டானே ? Message எதாவது இருக்கா???”

”மூணு தடவை கால் பண்ணியிருக்கான்…” என்று சொல்லும்போது கைப்பேசி மீண்டும் ஒலித்தது.

”என்ன சரண்… என்ன ஆச்சி”

மறுமுனையில் இறைச்சல்.

“சாரா ஒண்ணும் கேட்கல”

“அப்பா.. இங்க…”

“சொல்லு சாரா”

“… எல்லாம் காணாம போவுது..”

“என்ன காணோம்.. சரியா கேட்கல”

பக்கத்தில் இருந்து ராதா தன்னிடம் கைப்பேசியை தருமாறு சைகை காட்டினாள்.

“இந்த வயசுலயே காது கேட்கலயா என்கிட்ட கூடுங்க” என்று சொல்லி கைப்பேசியை வாங்கினாள். ஆனால் call cut-ஆகிவிட்டது.

ராமசிந்தர், “ஏதோ காணாம போகுதுன்னு சொன்னான்!!”

“நீங்க கால் பண்ணுங்க”

”பண்ணிடேன் line போகலே”

சிறிது நேரம் இருவரும் பேசாமல் கட்டிலில் அமர்ந்திருந்தனர். ராதாவின் கண்களில் லேசான கண்ணீர். ராம்சுந்தர் மீண்டும் மீண்டும் call செய்து கொண்டிருந்தார்.

மணி 3 AM

“டீ போட்டுறேன்..” என்று சொல்லி எழுந்தார் ராம்சுந்தர்.

“இருங்க நான் போடுறேன்” என்று சொல்லி சமையல் அறைக்கு விறைந்தார் ராதா.

ராம்சுந்தர் TV-யை on செய்து Channel News Asia-வை வைத்தார். திரையில் வருவதை பார்த்து ராதவை உறக்க கத்தி கூப்பிட்டார்.

ஜப்பானில் விடிந்தது அங்காங்கே பொருட்கள் காணாமல் போவதாகவும். வீடுகள், office கட்டிடங்கள் தானாகவே மறைவதாகவும் டிவியில் செய்தி வந்து கொண்டிருந்தது.

அரைமணி நேரமாக இருவரும் வைத்த கண் வாங்காமல் டிவியை பார்த்துக்கொண்டிருந்தனர். டீ போட வைத்திருந்த தண்ணீர் கோதித்து, ஆவியாகி, பாத்திரம் எரியும் நிலையில் இருந்தது. அழைப்பு மணியை யாரோ ஒலித்தப்பின் இருவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டனர். ராம்சுந்தர் கதவை திறந்தார். வாசலில் ப்ரதீப். பக்கத்து flat-ல் குடியிருப்பவர். இரவு shift முடிந்து வந்திருந்தார்.

“Uncle news பார்திங்களா. சரண் sir phone பண்ணாறா?”

”ஹாம்ம்ம். உள்ள வா”

“சார், Australiaவுல இருந்த என் friend message பண்ணிணான். அங்கேயும் இது மாதிரிதான். செயற்கையான பொருள்கள் எல்லாம் காணாமல் போகுதாம். ஆனா எல்லாம் ஒரே timeல இல்ல கொஞ்சம் கொஞ்சம்மா மறையுமாம். சூரிய ஒளி பட்டதும் எல்லா இடத்துலயும் எல்லா நாட்டுலயும் இப்படி நடக்குமாம்”

ப்ரதீப் முகத்தில் பதட்டம்.

“சார், நான் ஊருக்கு போறேன். என்ன ஆகுன்னு தெரியலா. Atleast என் அப்பா அம்மா கூடவாவது இருக்பேன். எட்டு மணி நேரம் travel… போவேனே இல்லயோ தெரியாது. உங்க கிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்.”

ராதவுக்கும் ராம்சுந்தருக்கும் தங்களிடம் சரண் இல்லையே என்று வருத்தம். சரணை மீண்டும் பார்போமா இல்லையா என்று கூட தெரியாது. ப்ரதீபாவது தங்களுடன் இருப்பான் என்று நினைத்தால், அவனும் போகிறான்.

ராம்சுந்தர், “சரண நாம இனிமேல் பார்க்க முடியாது போல ப்ரதீப். நீயாவது எங்க கூட இரு”

ஹாலில் உள்ள sofa-வில் தன் இரு கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு அழுது உட்கார்ந்தான் ப்ரதீப்.

மணி 5 AM

நகரம் முழுவதும் செய்தி பரவியது. இந்தியாவில் 5:45 மணிக்கு சூரியன் உதிக்கும். அதற்குள் தெவையான பொருட்களை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற பதற்றம் எல்லோரிடமும் இருந்தது. ராம்சுந்தர் தனது இரண்டாம் தள பால்கனியில் நன்று தெருவில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலையும் ஜனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒரு பெரிய குழியை வெட்டிக் கொண்டிருப்பதாகவும். அதில் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை போட்டு, சூரிய ஒளிப்படாமல் மூடிவிடுவதாக முடிவு செய்திருப்பதாக ப்ரதீப் வெளியே சென்று விட்டு வந்து சென்னான்.

வீட்டினுள் TV பார்த்துக்க்கொண்டிருந்த ராதா volumeமை உயர்த்தினார்.

“….இரவுக்குள் எல்லாம் மறைந்து விடும். மனிதன் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் துணியை தவிர எல்லாம் மறையும். பூமியில் புதைத்தாலும் தப்பிக்க முடியாது என்று வல்லுனர்க…”- TVயில்

Apartment மறைந்து விட்டால், யார் யாருக்கு எவ்வளவு நிலம் சொந்தமாகும் என்று கணக்கு போட வேண்டும் என்றும் அதற்காக secretary meeting போட்டிருப்பதாகவும் apartment watchman வந்து கூறினார்.

ராம்சுந்தர் சிரித்துக்கோண்டே வருவதாக சொன்னார்.

மணி 5:45 AM

முதல் சூரிய ஒளி நகரத்தின் மீது விழ ஆரம்பித்தது. 
முடிவின் ஆரம்பம்!!

நாள் 28ஆம் தேதி மார்ச் 2018
மணி 5:46 AM
இடம் – செO

************

[Alpha Centauri – பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம். பூமியில் இருந்து ஒளி புறப்பட்டல் Alpha Centauri சென்றடைய 4.4 வருடங்கள் ஆகும்]

இடம்- Proxima b (Alpha Centauriயாவின் ஒரு கோள்)
பூமி நேரம்- 2234ம் வருடம். 12 February. மதியம் 1 PM.

ஒரு பெண்ணின் குரல்,” இடம்- செ O வா! இந்தியா எங்க இருக்கு?”

ஆண்- தெரியாது. என்ன இது?
பெண்- காற்றில் பறந்து வந்த paperல ஏதோ கதை மாதிரி இருக்கு!
ஆண்- எங்க நான் படிக்கட்டா?
பெண்- சுமாராதான் இருக்கு. வா போகலாம்.
அவர்கள் உட்கார்ந்திருந்த வண்டி புறப்பட. படித்த காகிதத்தை கசக்கி கீழே போட்டாள்.

*********

Monday, February 20, 2017

மரணம்...


நான் எப்போதும் பலசரக்கு வாங்கும் கடைக்கு ஒரு மாதம் இடைவெளிவிட்டு சென்றேன். எப்போதும் சிரித்த முகத்தோடு, நெற்றியில் சந்தனமும் குங்குமப்பொட்டிட்டு கல்லாவில் இருக்கும் முதலாளி அங்கு இல்லை. வெளியில் எங்கேயோ சென்றிருக்கலாம் என்று நினைத்து, பொருட்களை எடுத்தப்பிறகு பணத்தை கொடுக்க கல்லாவுக்கு அருகில் வரும்போதுதான் அதை கவனித்தேன். அவரது படத்துக்கு மாலை போட்டிருந்தார்கள். விசாரித்ததில் அவர் இறந்து மூன்று வாரமாகிறது என்று சொன்னார்கள்.

மரணம், சாவு, இறப்பு என்ற வார்த்தைகளை நாம் கேட்டவுடன் ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்கிறது. சாலையில் தார தப்பட்டைகளுடன், பூக்களை தூவி, பட்டாசுவெடித்து ஆரவாரத்துடன் செல்லும் ஒரு மனிதனின் இறுதி பயணம், ஆரம்பிப்பது என்னோவோ அமைதியாக, யாருக்கே தெரியாமல்தான். (நான் இங்கு குறிப்பிடுவது ஒரு உயிரின் ஆரம்பம். நான்கு சுவருக்குள் நடப்பது. இது வேறு விடையம்)

தொலைப்பேசியில் யாராவது இறந்த செய்தியை சொன்னால் ஒரு நொடி நாம் என்ன சொல்வது என்று தெரியாமல் இருப்போம். சாவுக்கு செல்லும்போது ஒரு வித இறுக்கும் இருக்கும். அங்கு மரணித்தவர் உடலைப் பார்க்கும்போது உறக்கத்தில் இருப்பவர்போலவே இருக்கும், எந்த நேரத்திலும் அவர் எழுந்துவிடமாட்டாரா என்று எனக்கு தோன்றும்.

வாழ்க்கையில் நமக்கு நடக்கும் அதீத இன்பமான மற்றும் துன்பமான தருணங்கள் நம் நினைவில் எப்போதும் இருக்கும். சாவு வீடுகளுக்கு சென்ற நினைவுகள் நம் மனதில் தங்கிவிடும். மேலும் இறப்பு\பிறப்பு எப்போதும் நடக்கும் ஒரு நிகழ்வு இல்லை.

சொந்த பந்தங்கள் அழுது இறுதிசடங்குகள் செய்து முடித்தபின், எரித்தோ புதைத்தோவிட்டால் அந்த மனிதனின் அத்தியாயம் முடிந்துவிடும். எல்லோரும் சென்ற பின், மயானத்தில் ஒரு அமைதி. நம் கண் முன் இருந்த உடல், அடுத்த சில நொடியில் காணாமல் போய்விடுகிறது. மிஞ்சி இருப்பது அவரது எண்ணங்கள் மட்டுமே. ஆரவாரத்தோடு வந்த பயணம் இறுதியில் பிறப்பைப் போலவே அமைதியாக முடிந்துவிடுகிறது.


Tuesday, January 31, 2017

புத்தகங்களும் அதன் வரலாறும்


இது புத்தகங்களைப் பற்றிய வரலாறு இல்லை, நம் வீடுகளில் உள்ள புத்தகங்கள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயணிக்கின்றது என்பதைப் பற்றியது.

புத்தகங்கள் நம் வீடு வந்து சேர்ந்ததும் அதன் வரலாறு ஆரம்பமாகிவிடுகிறது. நாம் வாங்கும் புத்தகங்கள் எல்லாவற்றையும் நாம் படிப்பபதில்லை, சில சமயம் நாம் வாங்காத புத்தகங்கள் நாம் படித்தப்பிறகும் நம் அறையில் எப்போதும் இருக்கும்.

”பிரதாப முதலியார் சரித்திரம்” புத்தகத்தை வாங்குவதற்காகவே 2014ல் புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறையாக சென்றேன். அன்றிரவே, நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டேன். மறுநாள் அலுவலகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத ஒரு நண்பன் அதை வாங்கி சென்றான். நான் படிப்பதைவிட என்னால் ஒருவர் புத்தகம் படிக்க ஆரம்பிப்பார் என்ற ஆசை எனக்கு. அவர் படித்தார், ஆனால் அந்த புத்தகம் இதுவரை என் கையிக்கு திரும்பவே இல்லை. நண்பரின் அறையில் இருந்த அவரது நண்பர் எடுத்துச் சென்றார், அங்கிருந்து திண்டுக்கல், மதுரை என்று ஊர் சிற்றிவிட்டு இப்போது மீண்டும் வெளச்சேரிக்கே வந்திருப்பதாக தகவல்.

1984 சென்னையில் என் மாமவின் நண்பர் ஒருவர் “சாக்ரேடிஸ்-திருவள்ளுவர்” பற்றிய ஒரு ஒப்பீடு நூல் வாங்கினார், அது அவரது சொந்த ஊர் ராமநாதபுததுக்கு சென்றது, அங்கிருந்து வாணியம்பாடியில் இருக்கும் அவரது கல்லூரிக்கு, அங்கிருந்து என் மாமாவின் கிருஷ்ணகிரி வீட்டுக்கும் சென்றது. இப்போது என்னிடம் சென்னைக்கு மீண்டும் வந்துள்ளது.

இப்படி பல கதைகளும் வரலாறுகளும் புத்தகங்களுக்குள் இருக்கும். பல சமயங்களில் நாம் வாங்காத புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தை எற்படுத்திவிடும். Bus 9 to Paradise என்ற புத்தகத்தை பெங்களூரில் ஒரு நடைப்பாதைக் கடையில் வாங்கினேன். அப்போது என்னுடன் இருந்த நண்பனுக்கு அந்த புத்தகம் வேகுவாக கவர்ந்துவிட்டது. அவன் வேலை தேடி அலைந்த நாட்களில் அவனுக்கு அந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கை அளித்தது என்று இன்றும் என்னிடம் கூறுவான். அவனோடு அந்த புத்தகம் பல இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டது. இன்றும் அது அவனது இல்லத்தில்தான் உள்ளது. நான் வாங்கியது!

நான் ஒவ்வொரு முறையும் பழய புத்தகக் கடையில் உள்ள புத்தகத்தை கையில் எடுக்கும் போது, ”இதற்கு முன்னால் இந்த புத்தகத்தை யார் படித்திருப்பார்கள், எந்த எந்த ஊர்களில் இது பயணப்பட்டிருக்கும்” என்று எண்ணுவதுண்டு (காரகாட்டகாரன் படம் கார் போல!). சில புத்தகங்களில் பழைய உரிமையாளரின் பெயர் இருக்கும், சில வாக்கியங்கள் அடிக்கோடிட்டு இருக்கும். ”அட நமக்கு பிடிச்ச வரி அவருக்கும் பிடிச்சிருக்கே” என்று மனதில் ஒரு சிறு ஆச்சரியம். நம் எண்ணமும் அவர் எண்ணாமும் ஒத்துப் போகும்போது யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் நமக்கு நட்பு உண்டாகுவது போல் இருக்கும்.

உணவு செறித்துவிடும், உடை கிழிந்துவிடும், காலம் கடந்துவிடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் புத்தகங்கள் நம்மை பார்த்துக்கோண்டே நமது வரலாறை அதன் பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருக்கும்.




Saturday, January 28, 2017

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை

15 வருடங்கள் பின் நோக்கி செல்லவும். Flashback

முன்னாள் முதல் அமைச்சருக்கு ஏதோ ஒரு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததனால் கலவரம் நடக்க வாய்புள்ளது. ஆகையால் கல்லூரிக்கு விடுமுறை அளித்து எங்களை வீட்டுக்குப் போக சென்னதாக circularரை படித்த தமிழ் ஐயா கூறியதும் வகுப்பில் ஓஓஒவென்று சத்தம். நீங்க எல்லாம் மாணவர்களா என்று அவர் திட்டியதை காதில் வாங்காமல் வகுப்பைவிட்டு வெளியேரினோம்.

மதியம் சாப்பிட்டு ரூமில் ரம்மியாடும் போது, காலேஜ் பஸ் ஒன்றை யாரோ எரித்ததாகவும், அதில் சில மாணவர்கள் இறந்துவிட்டதாகவும் ஒரு நண்பன் வந்து சென்னான். சம்பவம் நடந்த இடத்தருகில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் இருப்பதாக சென்னான்.

சிறிது நேரத்தில் நாங்கள் ( ரூமில் இருந்த 5 பேர்) போராட்ட இடத்துக்கு சென்றோம். அங்கே எங்க காலேஜ் சீனியர்கள் யாருமில்லை, கலைக் கல்லூரி பசங்க கூட்டம் ரோட்டை மறிச்சி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு 200 பேர். NH 7ல் டிராஃபிக் ஸ்தம்பித்தது. நாங்கள் ஐவரும் நடு கூட்டத்துக்கே சென்றுவிட்டோம். அங்கும் மாணவர்கள் கலெக்டரிடம் (கண்டிப்ப்பாக அவர் வடநாட்டவர்) வாக்குவதத்தில் இருந்தனர். எங்களுகும் அவருக்கும் ஒரு 10 அடி இடைவெளிதான் இருக்கும்.

“LK Advani இங்கு வரவேண்டும். Karunanidhi இங்கு வரவேண்டும்”, “நீதி வேண்டும்” போன்ற கோஷங்கள் வந்தது. சிலர் சட்டைகளை கழட்டி ரோட்டில் உட்கார்ந்தனர்.

கலெக்டர் வண்டியின் பின் சில போலீஸார் இருந்தனர். அவர்கள் அருகில் ஒரு போலீஸ் வேன், கொஞ்ச தூரம் தள்ளி நிறைய காகிகள். அரைமணி நேரம் கூச்சல், குழப்பம். 

தீடிர்னு யாரோ CHARGEனு கத்த, ஒரு போலீஸ் குழு கலேக்டரை சுற்றி வளைத்து அரண் அமைத்தனர், மற்ற போலிசார் லத்தியால் மாணவர்களை “minimum force” கொடுத்து அடித்தனர். எறும்பு கூட்டத்தில் நீர் விழுந்தால் எப்படி எறும்புகள் சிதரி ஓடுமோ, அப்படி நாங்கள் ஓடினோம். நான் செய்வதரியாமல் reverseஆக ஓடினேன். கலேக்டருக்கு அரண் அமைத்தது, வேனில் இருந்த போலிஸார் கீழே குதித்து ஓடி வந்தது என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே ஓடினேன். இவை எல்லாம் சில secondsல் நடந்தது.

திரும்பி ஒழுங்காக ஓட வேண்டும் என்று எனக்கு தோன்றவேயில்லை. Reverseஆக ஓடியதில் ஒரு காலில் உள்ள செருப்பு காலை விட்டு பறந்தது. சுதாரித்துக்கொண்டு இன்னோரு செருப்பையும் வீசிவிட்டு திரும்பி correctஆக ஓடுவதற்க்குள் ஒரு போலீஸ்கர் அருகில் வந்துவிட்டார். ஒரு அடி இடது கால் பின் தோடையில் ஷாக் அடிச்ச மாதிரி விழுந்தது. திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினேன், அவர் முகத்தில் ஒரு வெறி, அடுத்த வேளாசல் லத்தி 3D effect மாதிரி முன்னால் வந்து சென்றது. மூன்றாவது வேளாசல் வருவதற்குள் ஓட்டத்தை அதிகப்படுத்தினேன், ஆனாலும் லத்தி லேசாக பின்னம் முட்டியை முத்தமிட்டு சென்றது.

கூட்டம் அருகில் இருந்த குறுக்கு தெருவுகளுக்குள் சென்றதால், போலிஸ்காரர்கள் எங்களை பின்தோடர்ந்து வருவதை நிறுத்தினர். மெயின் ரோட்டுக்கு சென்றால் மீண்டு அடி விழும் அப்புறமா போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்க என்று அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் எங்களுக்கு எச்சாரித்தனர். சந்து, குறுக்கு சந்து, மூத்திர சந்துகள் வழியாக, பல வீடுகளின் compoundகளை குதித்து, ஐந்து கி.மிட்டர்கள் சுற்றி இரவு ரூமுக்கு வந்தோம்.

அடுத்த நாள் எல்லாவற்றையும் கண்டித்து அமைதியான மவுன ஊர்வலம் நடத்துனோம். 

-அந்த முன்னாள் முதல்வர் அடுத்து ஆண்டு வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை.