Sunday, April 20, 2014

ஔவ் மச் வுட் வூட் எ வுட்சக் சக் (1977, ஜெர்மனி)



சமீபத்தில் ஸ்டிரொசெக் (Strosek) என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு காட்சியில் ஏலம் விடுபவர் டண் டண் டண் என்று சரவெடி போல பேசுவார். அப்படத்தை இயக்கிய வெர்ன்ர் ஹெர்சக-ன் (Werner Herzog) ஒரு நெர்காணலை பார்க்கும்போது அவர் ஏலம் விடுபவர்கள் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுத்துள்ளார் என்று தெரியவந்தது.

44-நிமிடம் ஒடக்கூடிய இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள பென்சிலுவேனிய மாநிலத்தில் நடைபெரும் மாட்டுச் சந்தையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் Tongue Twister, தமிழில் ”நா நெகிழ்” வாக்கியங்கள் என்று கூறலாம். அப்படிப்பட்ட வாக்கியங்களை மிகவும் சரளமாக பேசுகின்றார்கள் இந்த ஏலம் விடுபவர்கள் (முதலாளிகள் அல்ல, ஏலம் நடத்துபவர்). ஒரு மாட்டை ஏலம் விட 30-seconds மட்டுமே எடுத்துக்கொள்ப்படுகிறது.



ஏலம் கோருபவரின் கண் அசைவு, விரல் அசைவுகளை வைத்து மட மட என்று பேசி ஏலத்தை முடிக்கின்றனர். மின்னல் வேகத்தில் வரும் இவர்களின் பேச்சைக்கேட்டால் நம் வாய் பிளந்து நிற்க்க வேண்டும்.

வெர்ன்ர் ஹெர்சக 

ஒரு வெற்றிப்படத்தை எடுத்துவிட்டலே சிகரம் தொட்ட சிங்கங்களாக உலா வரும் இயக்குனர்களிடையே வெர்ன்ர் ஹெர்சக ஒரு மாபேரும் சகாப்தம். 40-மேற்பட்ட திரைபடங்கள் மற்றும் ஆவண்படங்கள் எடுத்த இவரின் படைபுகளை தனி அகராதி போட்டு எழுதவேண்டும்.




No comments:

Post a Comment