Thursday, August 4, 2016

மேடம் நீங்க..

சிறுகதை


எல்லாம் முடிஞ்சதா

இன்னியோட எல்லாத்துக்கும் ஒரு முழுக்கு

டிவியில பார்த்தேன். கூட்டம் போல. நான் கூட வரேன்னு சொன்னேன். நீ தான் கேட்கல

பரவாயில்ல. நீ என்ன தைரியமா வளர்த்திருகேன்னு வெச்சிக்கோ.. ஹிஹி

ம்ம்.. சாப்பிட்டியா

ம்.. வக்கீல் வீட்டுல சாப்பிட்டேன்

அவரு இல்லேனா இந்த கேஸ் இன்னும் இழுத்திருக்கும் இல்ல..

ம்ம்.. ஆமா

உன்ன தேடி உன் ஆபிஸில் இருந்து.. ராமோ.. ராமுவோ ஒருத்தரு வந்தார். உன்ன போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..

**********

என்ன கதை படிப்பவர்களே, ஒண்ணுமே புரியவில்லையா. இது நானும் என் அம்மாவும் பேசிக்கொள்வது. நான் யாரு ? என் பெயர் @#$%. இது என்ன @#$%னு கேட்குறிங்களா ? இருங்க மேல சொன்ன கதையை கொஞ்சம் தெளிவா சொல்லுறேன்.

**********

ஆட்டோ வீட்டின் முன் நின்றது. இறங்கும் முன் மீட்டரை பார்த்தேன் – 110.00. டிரைவரிடம் நூற்றியிருபது ரூபாய் கொடுத்தேன். அவர் பத்து ரூபாய் திருப்பிகொடுத்தார்.

மனதிற்குள், “பரவாயில்லையே சென்னைல இப்போ ஆட்டோவில் change எல்லாம் தற ஆரம்பிச்சிட்டுடாங்களே!

Change வாங்கிக்கொண்டு திரும்புகையில், ஆட்டோ டிரைவர் என்னிடம் “மேடம் நீங்க..

அவர் என்ன கேட்க வந்தார் என்று எனக்கு தெரியும், ஆனால் அதை காதில் வாங்காத மாதிரி gateய் திறந்து நான் வீட்டிற்குள் வந்தேன்.

அம்மா எனக்கா காத்திருந்தாள். என்னிடம் இருந்த papersசை வாங்கிக்கொண்டாள்.

எல்லாம் முடிஞ்சதா” என்று கேட்டாள்.

இன்னியோட எல்லாத்துக்கும் ஒரு முழுக்கு” என்று பேரு மூச்சுவிட்டு sofaவில் சாய்ந்தேன்.

அம்மா தண்ணி tumblerரை எனக்கு நீட்டியவாரு தொடந்தாள், “டிவியில பார்த்தேன். கூட்டம் போல. நான் கூட வரேன்னு சொன்னேன். நீ தான் கேட்கல

பரவாயில்ல. நீ என்ன தைரியமா வளர்த்திருகேன்னு வெச்சிக்கோ.. ஹிஹி” என்று சொல்லி நான் பல நாட்கள் கழித்து சிரித்தேன்.

நான் இப்படி சிரித்ததை பார்த்து மனதிற்குள் சந்தோஷபடும் அம்மா, அதை வெளிக்காட்டாமல் “ம்ம்.. சாப்பிட்டியா” என்று கேட்டாள்.

ம்.. வக்கீல் வீட்டுல சாப்பிட்டேன்

அவரு இல்லேனா இந்த கேஸ் இன்னும் இழுத்திருக்கும் இல்ல..

ம்ம்..ஆமா” நான் என் போனை எடுத்து எனக்கு வந்த கால்களை பார்த்தேன்.

உன்ன தேடி உன் ஆபிஸில் இருந்து.. ராமோ.. ராமுவோ.. ஒருத்தரு வந்தார். உன்ன போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..” என்றாள் அம்மா.

**********

இப்போ கொஞ்சம் தெளிவாக இருக்கா.. அந்த ஆட்டோ டிரைவர் என்ன ஏதோ கேட்க வந்தார் இல்ல! என் பெயர் எதுக்கு @#$%னு சொன்னேன் தெரியுமா. பாதிக்கப்பட்வர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது. அதுதான் ஊடக தர்மம். இந்த தர்மத்துக்கு கட்டுப்பட்டு நான் எழுதுறேன். ஆனால் என்னதான் டிவியில் காட்டிட்டாங்களே.. பெயர் கூட சொல்லிட்டாங்க.. விவாதிச்சிட்டாங்க.. ஆனா நான் சொல்லமாட்டேன். உங்க கற்பனைக்கே விட்டுடறேன். 26 வயதுல்ல, இப்போதிக்கு சுடிதார் போட்ட பெண். இப்போ கதைய தொடருவோம்.

**********

…. போன்ல பிடிக்க முடியலையாம், கிடச்சாலும் நீ கால் எடுக்கலியாம்..” என்றாள் அம்மா.

கோர்ட் உள்ள இருக்கும் போது எப்படி..” என்று நான் சொல்லும் போது எனது போனின் vibrator சிணுங்கியது.

ஹலோ

“………………………………………………”

ஆமாம் நான் தான் @#$%

“…………………………………………………………………………………………………………………………”

ம்ம்.. சொல்லுங்க கார்த்திக் ..

“……………………………………………………………………………………………………………………………………………………..………”

சரி அதுக்கு என்ன?

“……………………………………………………………………………….”

இல்ல சார், இப்போதான் எல்லாம் முடிஞ்சிருக்கு

“……………………………………………………………………………………………………………”

வேணாம் சார்

“……………………………………………………………………………………………………………………”

இல்ல.. கொஞ்ச நாள் கழித்துப்பார்ப்போம்.. ஸாரி..

போனை கட் செய்தேன். “யாரு ஆபிஸில் இருந்தா” என்றாள் அம்மா.

இல்ல.. டிவியில எதோ talk showவாம்.. இன்னிக்கு ஒன்பது மணிக்கு

போறியா

ஏன் நான் இன்னும் பிரபலம் ஆவனுமா. இப்பயே என்னால சுதந்திரம நடமாட முடியல. எல்லோரும் ஒரு மாதிரியா பாக்கறாங்க

தைரியமா இருக்கனும்” என்றாள் அம்மா.

அம்மா இப்படித்தான் புலம்பி புலம்பியே எனக்கு தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்தாள். அன்றிறவு எனக்கு தூக்கம் வரவில்லை.

**********
நான் ஏதோ பாதிக்கப்பட்டதாக முதலில் சொன்னேன் இல்ல.. ஆமாம் ஒரு வருஷத்துக்கு முன்னால் எ… தூக்கம் வந்துடுச்சி…
**********

காலையில் ராமிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இன்னிக்கே ஆபிஸுக்கு வரேன்னு சொன்னேன்.

ஒரு வாரம் பத்து நாள் கழிச்சி போலாமில்ல” என்றாள் அம்மா.

இல்ல வேலைக்கு போனா refreshingகா இருக்கும்

சொன்னா எங்க கேட்கப்போகுற. எத்தனை மணிக்கு வண்டி வரும்?

மதியம் ஒரு மணிக்கு..

சரி நீ டிவி பாரு.. அதுக்குள்ள நான் சமையல் ready பண்ணுறேன்” என்று சொல்லிக்கொண்டு அம்மா சமையல் அறையினுள் நுழைந்தாள்.

நான் டிவியை அணைத்தேன். 

அம்மா கொஞ்ச நாள் டிவி, நியூஸ் பேப்பர் எல்லாம் என் கண்ணுல காட்டாதே” என்றேன்.

அம்மாவுக்கு புரிந்திருக்கும்.

மதியம் 1:30 மணிக்கு வண்டி வந்தது. Tempo Traveller. வண்டியின் கதவை திறந்ததும், “மேடம் நீங்கதான் @#$%” என்றார் டிரைவர்.

ஆமா” என்று சொல்லிக்கொண்டே நான் உள்ளே சென்றேன். எட்டு..பத்து பேர் உள்ளே இருந்தார்கள். எல்லோரும் புதிய முகங்கள். எல்லோர் முகத்திலும் “இது.. அவங்களா..” என்பது போன்ற reaction. நான் காலியாக இருந்த ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன். ஒரு மணி நேர பயணம். யாரும் எதுவும் பேசவில்லை.

**********
நைட் என் கதையை சொன்னேனா ? ஓ அரம்பிக்கவேயில்லையா.. ஒரு வருஷம் முன்னால என்ன ஒருத்தன்.. அது என்ன ஒருத்தன் ஒருத்தர்னு கூட சொல்லலாம்.. வண்டி ஆபிஸின் முன் நின்றது
**********

எல்லோரும் இறங்கினார்கள். நான் கடைசியாக இறங்கினேன், முன்னால் நடந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டே என்னை பார்த்தும் பார்க்காதது போல ஒரு மாதிரி திருப்பியும் திரும்பாமல் கழுத்தை திருப்பி என்னை பார்த்தனர்.

ஆபிஸில் பாதி பேர் தெரியாத முகங்கள். தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் போல் முகத்தை மாற்றிக்கொண்டனர். ராம் மட்டும் என்னோடு பேசினான், அதுவும் HR என்ற முறையில்,

இப்போதிக்கு உங்களுக்கு எந்த teamமும் கொடுக்கல. கிஷோர் QBRக்காக பிலிப்பைன்ஸ்ல இருக்கார். வர டூ டேஸ் ஆகும்” என்றான் ராம்.

அதுவறைக்கும் நான்..”

நீங்க ஆபிஸுக்கு வரலாம்…. உங்கள ஆபிஸுக்கு வரவைப்பதுதான் என் வேலை.. floorல எந்த teamனு managementதானே முடிவு பண்ணணும்” என்றான்.

ம்ம்.. அதுவும் கரக்ட்

இரண்டு நாள் இரண்டு வருடங்கள் போல் இருந்தது. யாரும் சரியால பேசவில்லை. தெரிந்தவர்கள், “ஹலோ..எப்படி இருக்கீங்க”, “welcome back..” என்று ஒண்ணு இரண்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றனர்.

மூன்றாவது நாள் கிஷோர் முன் நான் உட்கார்ந்திருந்தேன்.

அவரும் வழக்கம்போல சம்பிரதாயமான வார்த்தைகளை சொன்னார்.

இதை கேட்டு கேட்டு அலுத்துப்போச்சி” என்று நினைக்கையில் அவர் மேலும் தொடர்ந்தார்.

@#$% அவனுக்கு எவ்வளவு வருஷம்?

நாலு

நாலு வருஷம் ஜெயிலில் இருந்த அவன் திருந்திடுவானா @#$%?

தெரியாது கிஷொர். என்னோட மன திருப்திக்காக கேஸ் போட்டேன்

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தோம். கிஷோர் தனது laptopல் எதையோ தட்டிக்கொண்டிருந்தார்.

அடுத்த மாசம் ஒரு new team வருது @#$%

கிஷோர் நான் கொஞ்ச நாள் இந்த ஊரவிட்டு போகலாமுன்னு இருகேன்

ஏன் என்பது போல முக பாவனை செய்தார்.

“அதுக்காக நான் வேலைய விடலே. Belfastல நம்ம processஓட pilot batch ஆரம்பிக்க போவதா கேள்விப்பட்டேன். அங்க .. ?

கஷ்டம்தான் @#$%.. நான் try பண்ணுறேன்..”

ரு மாதம் கழித்து சென்னை விமான நிலையத்தில் இதை எனது டைரியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். 
**********

அப்புறம் ஒரு வருஷம் முன்னால என்ன ஆச்சின்னு கேட்குறிங்களா? அட அதை விடுங்க. அந்த நிகழ்வுகள் உங்களைப்போன்ற மக்களின் மனதைவிட்டு மறையதான் நான் ஊரைவிட்டு கொஞ்ச நாள் தள்ளிப்போறேன். அப்புறம் பார்க்கலாம்.
***


வேறு சிறுகதைகள்

நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா 

Monday, August 1, 2016

ஜிம்மியின் சொர்கம் எப்படி இருக்கும்?ஆயத்தமின்றி கிறுக்கிய வரிகள் சில.

**1**

டேய் செவ்வாய்கிழமை ஏண்டா முடி வெட்டிக்கபோற என்று நண்பன் கேட்டதும் அம்மாவின் நியாபகம் வந்தது. 

**2**

வாத்து முட்டை போட்டால் ஆம்லேட் செய்யலாம் என்று காத்திருந்த போது, வாத்து பொன் முட்டையிட்டது. சா ஆம்லேட் போச்சே :-(

**3**

மளிகை கடையில்,
-வேற என்ன வேணும் சாமி என்றார் கடைக்காரர்
-சாதார்ணமா கூப்பிடுங்க என்றான்
-ஹி ஹி அப்படியே பழகிடுச்சி என்றார் சிரித்துக்கோண்டே

**4**

சாமி கும்பிட்டா சொர்கத்துக்கு போகலாம் என்ற அம்மாவிடம். ஜிம்மியும் (நாய்) நம்ம கூட வருமாமா என கேட்டது குழந்தை.

**5**

சவக்கிடங்கில்,

-அனாத பொணம்.. செத்து ரெண்டு மூணு நாள் இருக்கும் போல..
ஒரு வாரமாச்சிடா என்று மனதிற்குள் நினைத்தது பிணம்

****

**Above illustration along with the post is by the blogger