பதினெட்டாம் நூற்றாண்டில் மிகேல் நெர்மோன்தோ (Mikhail Lermontov) என்பவர் எழுதிய ஒரு கதையை மையமாக வைத்து அர்மீனியா இயக்குனர் சர்ஜி பிரஜானவோ (Sergei Parajanov) 1988-ல் எடுத்த படம் தான் ஆசிக் கரிப் (Ashik Kerib).
துருக்கி, அர்மீனியா, ஜார்ஜியா மற்றும் ரக்ஷ்யா நாட்டுப்புற கதைகளில் கலந்து விட்ட இக்கதையை சர்ஜி பிரஜானவோவுக்கு அவரது அம்மா சிறுவதிலிருக்கும் போது கூறியிருக்கிறார். ரக்ஷ்யாவில் படித்து பல திரைப்படத்தை எடுத்த சர்ஜியா பிரஜானவோ இறப்பதற்கு முன் எடுத்த கடைசி படம். அவர் ஒரு பேட்டியில் கூறும் போது இப்படம் சிறுவயதினருக்கு என்று கூறியுள்ளார்.
சர்ஜி பிரஜானவோ (Sergei Parajanov) |
கரிப் (Kerib) என்பவன் தெருவில் இசைபாடி பிழைப்பு நடத்திபவன். ஊரில் உள்ள பெரிய பணக்காரர் மகள் மகுள்-மெகாரி (Magul-Meger) மீது காதல் கொள்கின்றான். அந்த பணக்காரரிடம் பெண் கேட்கசென்ற கரிபின் தாயாரிடம் ஒரு ஏழைக்கு பெண் கொடுக்க முடியாது என்று பணக்காரர் மறுத்து விடுகிறார். மகுள்-மெகாரியும் கரிபும் ஒரு முடிவிற்கு வருகின்றனர். தான் ஆயிரம் நாள் காத்திருப்பதாகவும் அதற்குள் வேறு ஊருக்கு சென்று பிழைப்புத்தேடி பெரும்பணம் சேர்த்து வந்து தன்னை மணக்க வேண்டும் என்று மகுள்-மெகாரி கூறுகிறாள். இங்கு ஆரம்பிக்கும் கரிபின் பயணம் என்னவானது? அவன் மகுள்-மெகாரியை மணந்தானா? என்பது தான் கதை.
இது குழந்தைகளுக்கான படம் என்பதாலோ என்னவோ குழந்தைத்தனமாகவே இப்படம் இருக்கிறது. ஒரு முதிர்ச்சியற்ற உலக பிரசிதிப்பெற்ற இயக்குனரிடம் இருந்து வந்த படைப்பாக பார்க்க முடியாது. சர்ஜி பிரஜானவோவின் பின்புலத்தை தெரியாதவர்கள் இப்படத்தைப்பார்த்தால் அவரை ஏதோ கத்துக்குட்டி என்று நினைப்பார்கள்.
ஆசிக் கரிபில் பிடித்தது அதன் இசை. இஸ்லாமிய இசை வகையைச்சார்ந்த முஸ்லிம் மோகம் (Muslim Mugham) என்ற இசை இத்திரைப்படம் முழுவதும் பயணிக்கிறது.
79 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சினிமாவில் ஒரு மாற்று முயற்சி. வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள். நான் ஏற்கனவே 3-முறை பார்த்து விட்டேன்.
No comments:
Post a Comment