Saturday, April 5, 2014

ஈட் (1963, அமெரிக்கா)


அண்ணாத்த படத்த பத்தி வசிக்கறதுக்கு மின்னால இத்த படிங்க.


வொரு வார பத்திரிகைல எல்லா பேபரும் வைட்டா (white) கீது. அட்டையில அந்த புக்கோட பேரு தவுர வேற ஒணீயும்மில்ல. இப்படி ஒரு புக்கு (பத்திரிக்கை) ஒரு தபா னெஜம்மாலும் வந்திசீ. இந்த நியுஸ்ச ஒரு ஓரமாவுட்டு படத்த பத்தி பாக்கலாம்.


Underground film-ன்னு இந்த படத்த சொல்லுவாங்க. 1963-ல அன்டி வார்ஹல்-ன்னு (Andy Warhol) ஒரு படம் வரையருவன் எடுத்த படம்தான் ஈட் (Eat).

படத்துல பாத்த கதை ஒணீயும்மில்ல. ராபர்ட் இண்டியான-னு (Robert Indiana) ஒருதன் காளாண்னை (Mushroom) துன்றான். அவன் காளான் துன்றத சொக்க 45 நிமிசம் படத்துல ஒடுது. அப்பல அப்பப்போ அவனோட பூன குறுக்கால வந்துட்டு போகுது. அவ்வளதான் வேர எதும் இல்ல. அட சவுண்டுகூட இல்ல பாஸ்.

Anti films-ன்னும் வகேரவுல அன்டி வார்ஹல் மூணு படங்கள எடுத்துருக்கான்.
  • கிஸ் (Kiss, 1963)- வேற என்னக்கிதபோது 50- நிமிசம் கில்மாவ கிஸ்சுங்க தான்.
  • ஸ்லிப் (Sleep, 1963)- இது மகா பேஜாரான படம். 6-ஹவர் ஒருதன் ஜபர்தஸ்தா தூங்குறத  மட்டும் தான் படம்.

மின்னால சொன்ன அந்த புக்கு பேரு துக்ளக். எமர்ஜன்சி டைம்முல சோ கவர்மெண்டுக்கு எதிர இப்படி வயுட் பேப்பரை மட்டும் வெச்சி வெளியிட்டாரு.

Andy Warhol - அன்டி வார்ஹல்

அன்டி வார்ஹல் பண்ணது எதோ பிக்காளி பசங்க கணக்க மொக்க போடுரான்னு நெனச்ச பிரிய வுடுங்க, பிலிங்கஸ் வேணாம். இல்ல அவன் எதோ கருத்து சொல்ல வரானு நெனச்ச think-பண்ணி பாருங்க. இப்போ என்ன free-யவுடுங்க. நான் ஜகா  வாங்குரென்.




No comments:

Post a Comment