Showing posts with label Tamil Writing 2015. Show all posts
Showing posts with label Tamil Writing 2015. Show all posts

Tuesday, November 17, 2015

நவகரகங்கள் TO பாரதவிலாஸ்





இந்த கதை, நவகரகங்களாக இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்வாசிகள் (apartment) எப்படி பாரதவிலாஸாக மாறினார்கள் என்பதை பற்றியது.

ஒன்பது குடும்பங்கள் இருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் கிட்டத்தட்ட 5000 சதுர அடி இருக்கும். தரைத்தளத்தில் உள்ளவர்கள் எப்போதும் எதிரிகள். முன்னாள் செயலாளருக்கும் இன்னாள் செயலாளருக்கும் இடையே பனிப்போர். சிரிக்க சிரிக்க போசினாலும் எதிர்நிச்சல் சௌகார் ஜானகி போல ஜாடமாடையாக போட்டு வாங்குவார்கள். ஆண்களுக்கு பைக் பார்கிங் (bike parking) எப்போதும் பிரச்சனை, பெண்களுக்கு துணி காய வெய்க்கும் கொடிக்கு சண்டை. தலைமைச் செயலக செயலாளர் கூட தோத்துடுவாங்க, அப்படி ஒரு ரோல்ஸ் (Rules). போட்டிப்போட்டு டிவி சவுண்டு வெப்போம். இதில் ஒரு ஹால்லேலூயா குடும்பம் வேற. அப்பார்ட்மெண்ட் பில்டிங்க்கு repaint அடிப்பதுக்கூட இன்னும் ஒருமித்தக்கருத்துக்கு வராதவர்களை இந்த மழை ஒன்று சேர்த்து வைத்துவிட்டது!

முதலில் ஒன்று சேர்ந்தது, தரைத்தளத்தில் இருக்கும் இரு துருவங்கள். விடாமல் நான்கு மணி நேரம் கொட்டிய மழையால், தெருவில் இருந்து மழைநீர் வீட்டுக்குள் வந்தது. மணி அப்போது நள்ளிரவு 1 AM. ”சார், எல்லா திங்ஸயும் (things) எடுத்து மேல வெச்சிக்கோங்க..” என்று சொன்னதில் ஆரம்பமானது இவர்களின் லா,,லாஆ..லலாஆ..லா.

தரைத்தளத்தில் இருந்த மூன்று குடும்பமும், முதல் தளத்திர்க்கு தஞ்சம் புகுந்தனர். தென் கொரில்லா, சாரி தென் கொரியா – வட கொரியாவாக சண்டைப்போட்டவர்கள் விருந்தாளிகள் ஆனார்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு என்ன அஜித்-விஜய் பற்றியா பேச முடியும். நம் அரசியல்வாதிகளின் கையாலாகத்தனம் பற்றி ஒர் - இரு வார்த்தைகளை பேசிவிட்டு எல்லோரும் சத்தமில்லாமல் குறட்டைவிட அரம்பித்தனர். நிம்மதியாக உறங்கியவர்களும் அடுத்த நாள் முதுகேலும்புகள் உடைவதுபோல வேலை இருக்கும் என்று தெரியாது.

விடிந்ததும், பெரு மழைவிட்டது. தேருக்கள் ஆறாக மாறின. மெயின் ரோடு கடலாக மாறின. பானிபூரி கடை நடத்தும் பீகாரிகள் இந்த மழை வெள்ளத்தில் டீ, காபி விற்க ஆரம்பித்தார்கள்!. பால் packetகள் விற்பனை பறந்து, நம்ம அப்பார்மெண்டில் சமூக சமையல்! வீட்டுக்கு வீடு உணவுகள் பரிமற்றப்பட்டன. 

4 PM – தேருவில் மழைநீர் வடியவேயில்லை. EB மீட்டர்கள் தண்ணீருக்குள் இருக்க, current வந்த என்ன ஆகும் என்ற விவாதம் கிளம்பியது. திடீர்னு power வர, ஆர்வ கோளாரு ஆண்டிகள் well water motor போடலாம் என்று புறப்பட, செயளாளர் shutter பொட்டு “யார் அங்கே, tester கொண்டு வாருங்கள்” என்றார். கேட்ட, கீழ நிக்குற தண்ணீயில் tester dip பண்ணிபாக்கலாம் என்றார். ங்ங்ங். நல்லவேளை அதுக்குள்ள power பொயிந்து. சபாஆஆ. விபரீத விளையாட்டு முடிவுக்கு வந்தது.

இருண்டதும் ஒளி பிறந்தது. தேருவில் மழைநீர் வடிய ஆரம்பித்தது. Current இல்லாத போது வீட்டில் இருக்கும் நீரை வேளியேற்றுவதற்க்கு ஒரே வழி பக்கேட்டில் (bucket) எடுத்து ஊத்துவதுதான். இது பாகீரத பிரயத்தனம். நம்மால் முடியும், நமக்கு நாமே என்று சொல்லி நாங்கள் எல்லோரும் இடுப்பில் கைலியும் கையில் வாலியுமாக புறப்பட்டோம். 

         “..எ வரான்டா.. இவன் எம்.ஜி.ஆரும் பேரன்தாண்டா..” என்ற பாட்டை இந்த சீனுக்கு BGM போட்டுக்கோங்க. 

பல ஆயிரம் பக்கேட்ஸ் (buckets) வெளியேறிய பின்பும் நீர் குறைந்ததாக இல்லை. தேருவில் பொறவங்க வரவங்க விதவிதமா ஐடியா கொடுத்தாங்க, சிலர் முடியாதுன்னு கிண்டல் அடிச்சாங்க. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உத்வேகம் கொடுக்க, தண்ணீர் பாதியாக குறைந்தது. காலையில் முற்றிலுமாக வடிந்தது. மழைக்கு முன் 2 – 3 அணிகளாக இருந்தவர்கள், இப்போது ஒர் அணியாக “நல்லதோரு குடும்பம்..” என்று பாட ஆரம்பித்தனர். இன்னும் எவ்வளவு நாள் இது தாக்கு பிடிக்குமோ!!


Friday, October 23, 2015

சார் நீங்க என்ன ஜாதி ?



சமீபத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு உறவினருடன் பேசும்போது அவர் தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் அவர்களின் சாதியின் பெயரைக் கூறிப்பிட்டுப் பேசினார். சம்பந்தமே இல்லாமல் இவர் எதற்கு சாதியை இழுக்கிறார் என்று நினைத்தேன். உறவினர் என்பதால் நான் அதற்கு எதிர்வினைக் கூற முயலவில்லை. 

வேறு பல சந்தர்பங்களில் நான் தெரிந்துக்கொண்டது- அரசு வேலையில் இருப்பவர்கள் அனேகமாக தங்களுடன் பணிபுறியும் சக ஊழியர்கள் எந்த எந்த சாதியினர் என்பதை அறிந்து அதற்கு எற்றாற்போல் செயல் படுகின்றார்கள்.

அரசுத்துறை இப்படி இருக்க தனியார் மட்டும் என்ன விதிவிலக்கா? சாதி வாரியான இட ஒதுக்கீடு இல்லையே தவிர சிலர் மனதில் சாதியையும் மதத்தையும் சுமந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நான் கேட்ட சில “சாதி” ரிதியான வாக்கியங்கள்,

“..அவளுக்கு என்ன __ராச்சே. எங்க போனாலும் பொழச்சிப” 

“..இந்த __ பயலுங்களே இப்படித்தான்”

இப்படி சாதியை மேற்கொள் காட்டி ஒருவரின் character-ரை தீர்மானிக்கின்றனர். அரசுத்துறையில்லாவது application form முதல் எல்லா bio-date/profile formகளில் சாதியை கூறிப்பிடவேண்டும். ஆனால் தனியார்துறையில் அப்படி இல்லை. இப்படி இருக்கையில் எப்படி எப்படியோ துருவி அடுத்தவனின் சாதியை கண்டுபிடிக்கும் சகாக்களே வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்க!!

Above picture by the blogger for illustration purpose only :-)


Sunday, August 2, 2015

பாகுபலியும் சினிமாவின் விதிகளும்.



Epic, காவியம், இந்திய சினிமாவின் உச்சம் என்று பலரும் போற்றும் ஒரு படம் எப்படி எந்த விதத்திலும் சினிமாவின் புளித்துப்போன விதிகளை மீறாமல் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் ? மேலும் இதில் பல முரண்கள். Fantasy என்ற வகையில் (genre) ஒளிந்துக்கொண்டு சப்பைகட்டு வேறு. படம் வந்து பல வாரம் ஆவுது இபோ எழுதுற? எனக்கு நேரம் கிடைத்தால்தான் எழுத முடியும்!!

1. ஒரே ஒடத்தில் மிகப்பெரிய அருவி, பனி மலை, பொட்டல் காடு, மாநகரம்.. என்று வினோதமான நிலப்பரப்புகள் கொண்டப்படம். 

2. ஆற்றில் வரும் குழந்தை எப்போதும் குழந்தையில்லாத தம்பதிகளிடமே வந்து சேரும். சினிமாவின் விதி.

3. பெரிய அருவியில் இருந்து குதித்தால் நம்ம ஹீரோவுக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாது. சினிமாவின் விதி.

4. சிவு அவந்திகாவுக்கு பெண்மையை உணர்த்துவார். எல்லா படத்துலயும் நம்ம ஹீரோவோட முதல் வேலை இதுதான். சினிமாவின் விதி.

5. மயிலாட்டம், கரகாட்டம், பரதம், செண்டமேளம், நாதஸ்வரம், தவில், ஆப்பிரிக்க பழங்குடி டான்ஸ், item dance என்று எல்லாவிதமான கலைகளும் உள்ளடக்கிய படம்.

6. 100அடி சிலைய செதுக்கிட்டு அப்புறம் தூக்கி நிறுத்துவாங்க. வடிவேலு விழுதுகள் plan.

7. அப்பா ஹீரோவும் மகன் ஹீரோவும் ஒரே மாதிரிதான் இருப்பங்க. சினிமாவின் விதி.

8. அம்மாவும் பிள்ளையும் (ஹீரோ) பிரிந்தால் 25 வருஷம் கழித்து கண்டிப்பா ஒண்ணுசேருவாங்க. சினிமாவின் விதி.

9. ராஜா ராணி படமென்றால் ஒரு character பெயர் “மார்தாண்டன்” என்று கண்டிப்பா உண்டு. சினிமாவின் விதி.

10. மூன்று பெண்களோடு ஒரு குத்தாட்டம் போடலேனா தெலுங்கு பட ஹீரோக்களுக்கு தூக்கமேவராதே! சினிமாவின் விதி.

11. அது எப்படி அந்த ஒற்றன் மலையில் இருந்து குதிப்பான் என்று பாகுபலிக்கு தெரியும். Readyய கயிரோட வராரு!

12. நாட்டின் பெயர்கள், characters பெயர்கள், படத்தில் வரும் கலைகள், நிலப்பரப்பு என்று எதிலும் sync இல்லாத படம்.

13. காளகேயர்கள்-தான் பாகுபலி படத்தின் comedy-யர்கள்.

14. காட்டுமிராண்டிகள் கருப்பாதான் இருப்பாங்களா? சினிமாவின் விதி.

15. போர்களத்தில் (சண்டைக்காட்சி) ஒரு சிறு பிள்ளையை காப்பாற்றுவது கலாகலத்துக்கு நம்ம ஹீரோக்கள் செய்யும் ஒரு சமுதாய சேவை. சினிமாவின் விதி.

கடைசியில் ஒரு போரை அக்கப்போர் ஆக்கியதுதான் மிச்சம்.


Friday, May 15, 2015

நிறமற்ற வானவில் - Sujatha










Read a Sujatha novel after a long time. நிறமற்ற வானவில். Before he starts the first chapter, Sujatha starts his silumizam.

The first chapter is named as “முதல் அத்தியாத்துக்கு முன்”!

I found it difficult to read (may be I’m still in the shadows of Ponniyin Selvan- Waiting for the 5th part book). Too much of sentences in English, those are in Tamil text. I had to spell it word by word. Some Tanglish words I could find or get the meaning. Ex. “லைஃப் இஸ் அப்ஸர்ட்”. அப்ஸர்ட்- I couldn’t translate in Tamil.

The story is about a middle-aged man named Moorthy. He is confronted with a personal loss in his life. How he gets himself out of the mess is the story.

Sujatha’s character can only extract dry and witty humor in unusual circumstances. As said before, when Moorthy is confronted with a personal loss, his brother-in-law speaks with him,

”மூர்த்தி ரொம்ப டீப்பா எடுத்துக்கறப்பா.. இதை”
“பின்ன விசில் அடிக்கச் சொல்றீங்களா, இல்லை தபலாவா? தாரை தப்பட்டையெல்லாம் கொட்டுவமா?”

Here is another, when Moorthy and his friend Vinod go to his secretary Guna (female) house. After meeting her Vinod to Moorthy,

“.. பேசாம அந்த குணாவைக் கல்யாணம் செய்துக்கோ! நல்லா டீ போடறா..”

The cliché part in the book is the Tamil slang by few characters. Is it mandatory that a Chennai city bus driver and the auto driver have to speak in Chennai-bashai ?

The 200-page novel is racy in parts, a little thriller at the end, sometimes it talks about death, but not philosophical. Ideal fictional read without much to think about.




Saturday, April 4, 2015

இணையத்தை காப்போம்



66(A)-யை இந்திய சட்டத்தில் இருந்து நீக்கிய இந்த நிலையில் இப்படி ஒரு தலைப்பை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஆம் இணையத்திற்கு ஆபத்து வந்துள்ளது. எப்படி? பார்ப்போம்.

சாமானியனின் குரல்

இணையம் சாமானியனின் குரல். நாம் post-பண்ணும் ஒவ்வொரு tweet-டும், Facebook-ல் இடும் status message-ம், what’s app-ல் அனுப்பும் மொக்க jokes-ம், Youtube-ல் பார்கும் video-களும், இப்படி எல்லாவற்றையும் “0” அல்லது “1” அடக்கி சேமித்து (Store) ஒர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றலாம் (Transfer). இதையெல்லாம் பண்ணுவதுதான் ISP (Internet Service Provider)-களின் வேலை. இவங்க வேற யாருமில்ல.. Airtel, Tata, MTS, Reliance.. போன்ற தொலைப்பேசி சேவையை (TSP- Telephone Service Provider) கொடுக்கும் நிறுவனங்கள். இவர்களை (ISP & TSP) கட்டுப்படுத்துவது TRAI (Telephone Regulation Authority of India) என்ற மத்திய அரசின் அமைப்பு. இப்போ பிரச்சனையே TRAI கொண்டுவரப்போகும் OTTS license முறைதான்.

OTTS என்றால் என்ன? யார் இவர்கள் ?

OTTS – Over The Top Services.

இணையத்தில் எந்த வளைதளமோ (website) அல்லது mobile application-னோ நாம் மேலே பார்த்த 0 அல்லது 1 தகவல் பறிமாற்றங்கள் அதிகமாக நடத்துறாங்களோ, அவிங்க எல்லாம் OTTS. 

OTTS உதரணங்கள்- YouTube, FaceBook, Google, Yahoo, Skype, Viber, WhatsApp, Vimeo, Instagram,  Wikipedia, Flipkart, Snapdeal...

இப்படி அடுக்கிட்டே போகலாம். TRAI சொல்லுவது- இப்படிப்பட்ட OTTS-கள் இணையத்தை உபயோகப்படுத்தி அதிகம் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்குள் பெரும் போட்டி நிலவுது. மேலும் இவர்களால் பாரம்பரியமாக தொழில் நடத்துவோர் பாதிக்கின்றனர் (Airtel phone-னை விட்டு Skype-ல் கால் செய்வது). அதனால் TRAI ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர நினைக்குது.

யாருக்கு தீங்கு ?

இதனால் யாருக்கு பாதிப்பு. வேறயாரு நாம்பதான்!. ஆமாம் நுகர்வேர் (consumer) மீதுதான் இது விடியும். எப்படி ?

50-ரூபாய் கொடுத்து 100-சேனல்கள் (cable-லில்) பாத்துட்டு இருந்த நம்பள எப்படி 100-ரூபாய்க்கு 50-சேனல்(DTH) பாக்கவெச்சாங்களொ, அப்படித்தான் ஆகும் இணையம்.

1 GB data-க்கு Rs. 250 + Google-க்கு Rs. 50 + Facebook-க்கு Rs. 100

அல்லது

1 GB date-க்கு Rs. 250 + Whats App-கு Rs. 50 + Skype-கு Rs. 50

இப்படி பிச்சி பிச்சி packages வரும். நாம்ம ருசிகண்ட பூனைங்க சும்மா இருக்க முடியுமா ? வாங்கியே ஆகணும்.

என்ன ஆகும்?

- நுகர்வோர் அதிக பணம் கொடுக்கவேண்டிவரும்

- இணையத்தை உபயோகப்படுத்துவோர் குறைவார்கள்

- தகவல் பரிமாற்றம் குறையும்

- இணையம் சார்ந்த தொழில் தொடங்க முன் வர தயங்குவார்கள்

இணையத்தில் நல்லது, கெட்டது இருக்கிறது, சுதந்திரம் உள்ளது, தெரிந்து கொள்ள நிறைய தகவல் உள்ளது. TRAI எல்லவற்றையும் கட்டுப்படுத்த நினைக்குது. இது மத்திய அரசின் மறைமுகமான கட்டுப்பாடு.

இப்போ என்ன சட்டமா வந்துடுச்சி ?

சட்டம் வரலை. ஆனால் இதை சட்டமாக கொண்டுவர TRAI ஒரு கலந்தாய்வு அறிக்கையை (Consultation Paper) வெளியிட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு அறிக்கையில் 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கு யார் வேண்டுமானலும் பதில் (மறு மொழி) TRAI-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். 

கலந்தாய்வு அறிக்கையை download செய்ய- http://trai.gov.in/content/news/71241_0.aspx

TRAI மின்னஞ்சல் முகவரி – advqos@trai.gov.in

அனுப்புனா என்ன ஆகும் ?

நம்ம ஊருல புதுசா தொழிற்சாலை வைக்கனும்னா எப்படி ஊரில் உள்ள மக்கள் கிட்ட கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவாங்களோ அப்படித்தான் இந்த 20 கேள்விகளும். TRAI-கு மின்னஞ்சல் அனுப்ப கடைசி நாள் – 24/4/2015. April 24th 2015.

மேலும் படிக்க





** Image from Internet

Thursday, January 22, 2015

உருளைகிழங்கும் வேக வைத்த cauliflower-ம்


Chennai Book Fair 2015


இன்னமும் படிக்க வேண்டிய books நிறைய இருக்க இப்போ எதுக்குடா book fair-க்கு போகணும் என்று சொன்ன என் அம்மவிடம் “ஒரு சட்ட கீழிந்துப்போனாதான் இன்னோரு சட்ட வாங்கணுமா” என்று நான் வாதம் செய்ய… என்னை வதம் செய்வதை போல பார்த்து “எப்படியோ போ” என்று என் மேல் கொஞ்சம் pepsi தெளித்து போகவிட்டாள். 

வண்டியை YMCA ground-க்கு உள்ளே விட்டேன்.. Take left.. Take right என் அங்காங்கே தற்காலிக traffic constable-கள். கடைசியாக ஒரு ground-ல் park பண்ணவிட்டாங்க. உள்ளே போக வழி தெரியாம விழி பிதுங்கி நின்ற என்னிடம் மஞ்ச T-shirt-ல் Book Fair Logo பொட்ட சகோ “இப்படி போங்க sir” என்று ஒரு ஒத்தையடி பாதையை காண்பித்தார். 

10-15 அடி நடந்துப்போனால் வழியில் தண்ணீ தேங்கி இருக்கு!. இது சுச்சா தண்ணீயா இல்ல மூச்சா தண்ணீயான்னு தேரியல. எதோ ஒரு புண்ணியவன் அங்க பாம்பன் பாலம் கணக்கா ஒரு பலகைய போட்டிருந்தான்(ள்). அந்த பலக 1 அடி அகலமும் 8-10 அடி நீளமும் இருந்தது. மெள்ள மெள்ள அந்த பலகையில நடக்கும் போது கிழ ஒரு தட்டுல உரித்த உருளைகிழங்கும் வேக வைத்த cauliflower-ம் இருந்தது (கவலை வேண்டாம் cauliflower பிற்பாடு இக்கட்டுரையில் திரும்ப வரும்). 

ஒரு வழிய தத்தி தாவி உள்ளே வந்தாசி. ஒரு பக்கம் Delhi-அப்பளம், ஒரு பக்கம் மிளகபஜ்ஜி, அந்த பக்கம் cotton candy, இந்த பக்கம் கரும்பு juice, அப்பால American corn, இப்பால பானிபூரி… என்னாட இது ஒரு வேள நாம address மாறி வந்துட்டோமொ என்று think-பண்ணிக்கிட்டு நடந்தா எதிரில் ஒரு uncle வேர்க விறுவிறுக்க cauliflower Manchurian-ன (முன்ன சொன்ன அதே cauliflower) அவர் வயிக்குள்ள போட்டு மென்று லபக் லபக்குன்னு முழுங்கிட்டு இருந்தாரு. அடப்பாவி uncle செத்த பின்னால போய் பாருங்க இப்போ நீங்க சப்பிட்ட cauliflower கொஞ்சம் நேரம் முன்னாடி Palk-ஜல சந்தில ஜலகிரிடை நடத்திண்டு இருந்தது. 

என்னோட நாக்க அடக்கம் செய்து ticket வாங்கி உள்ளே போனா ஜெ ஜெ (not மக்கள் முதல்வர்) என்று கூட்டம். எந்த stall-லுக்கு போனாலும் 4-5 பேர் books-ச வெரிச்சி வெரிச்சி பாத்துட்டு இருக்காங்க! யாரும் நவ்வுரமாதிரியே தெரியல. சிங்கம் களத்துல எறங்கிடுச்சின்னு சொல்லி எல்லோருக்கு “excuse me”-ன்னு பேரு வெச்சேன். கூட்டத்தோடு கூட்டமா நானும் கறஞ்சிபோணேன்.

**Above pic taken in Chennai Book Fair 2015 by this blogger