Sunday, April 22, 2018

Mind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்


வாய்ப்பு கிடைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் [எது முன்னேறம் என்பது வேற கேள்வி]. சிலர் வாய்ப்பை உண்டாக்கின்றார்கள். சிலருக்கு வாய்ப்பு fridgeல் உள்ள chill beer போல தானாக வரும். 

படங்களில் பார்த்திருப்பீர்கள்- ஹீரோ interviewவில் மளமளவென்று எல்லா கேள்விகளுக்கும் பதில் செல்வார். கேள்வி கேட்பவர் முகத்தில் ஆச்சர்யம். “You are appointed” என்று சொல்வதுதான் பாக்கி. அப்போது அவருக்கு ஒரு போன் வரும். பேசி முடித்தவர் முகத்தில் ஒரு sad emojiயை வைத்துக்கொண்டு ஹீரோவை பார்ப்பார். நம்ம ஹீரோவுக்கு subject over என்று புரிந்துவிடும். 

மேலே சொன்ன scene சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கற்பனை என்றாலும் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு சிலர் இப்படி பெரிய சிபாரிசு மூலமாக வேலையில் சேர்வதுண்டு. 

எந்தவித தகுதியும் திறமையும் இல்லாமல், Project Managerன் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைவதுண்டு. இப்படி நடப்பது ITல் அரிது என்றாலும் அங்கோன்றும் இங்கோன்றுமாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. 

நான் வேலை செய்த ஒரு IT நிறுவனத்தில், 45 வயதுள்ள ஒருவர் join செய்தார். பெயர்- கோவிந்தன் (மாற்றப்பட்டுள்ளது). அவர் join செய்த post- Group Manager. அவருக்கு 4-5 Team leaders report பண்ணுவார்கள். கோவிந்தனுக்கு இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லை. Program Directorன் சொந்தம் என்ற ஒரே தகுதியில் அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டார். இதில் irony என்னவென்றால் அவருக்கு Outlookல் mail அனுப்பகூட தெரியாது! மிகமிக சுமாரான ஆங்கிலம்தான் வரும். தமிழ் தெரியாது. தெலுங்கு & ஹிந்திதான் வரும். எதையும் புரிந்து கொள் முயற்சிக்கமாட்டார். தான் பிடித்த ஈமூ கோழிக்கு மூணு கால் என்ற நிலையில்தான் இருப்பார். இவர் யார் என்று தெரிந்துகொண்ட சில அல்லக்கைகள் அவரையே சுற்றி வருவார்கள். அவரின் வேலையை இவர்களே செய்வார்கள். அப்புறம் என்ன மஜாதான். 

படித்து, arrears வைத்து, பட்டம் பெற்று, கஷ்டப்பட்டு, office politics எதுவும் செய்யாமல். உழைப்பே உயர்வு என்று வாழ்ந்துக்கொண்டு வாய்ப்புக்காக traffic jamல் பலர் காத்திருக்க இப்படி சிலர் helicopterல் சென்று இறங்கிவிடுகின்றனர். 

சரி இப்போ எதுக்கு இந்த புலம்பல் என்று நினைக்கின்றீர்களா? இப்போ தகுதி இல்லாதவர்கள் தானே தலைவர்/வி-யாக இருக்கின்றார்கள்.


Saturday, January 6, 2018

Year 2017 - Books Read and Recommended

The following are some books read (recommended) by my Twitter followers (non-followers !!). Sapiens by Yuval Noah Harari and ஊமைச்செந்நாய் by Jeyamohan tops the list.

Love, virtually! A German book translated into English with a surprising twist. Could as well be made into a tamil movie.

Most favorite: Ashoka - Charles allen

Others in no particular order. 1. The seventh scroll - Wilbur smith 2. In the valley of kings 3. Last mughal - William darylmpele 4. எனது இந்தியா - எஸ். ரா 5. இந்து தேசியம் - தொ. பரமசிவன்.


ஒரு வீடு ஒரு மனிதன் - ஜெயகாந்தன் 2. A long way gone: the true story of a child soldier -Ismael Baeh 3. The Spy - Pulo Coehlo 4. Fountain Head (re-read) - Ayn Rand

An Era of Darkness - Shashi Tharoor 2. Agent Storm : my life inside Al Queda 3. Still Counting the Dead: Survivos of SriLankan War 4. When Breath Becomes Air -Paul Kalanithi 5. Maximum City ; Bombay lost and found.

When breath becomes air -Paul Kalanithi அபிதா - லா.ச.ரா A history of the world in 10 1/2 chapters - Julian Barnes கொற்றவை - ஜெயமோகன் வெண்ணிற இரவுகள் - Fyodor Dostoevsky சில புதுமைபித்தன் சிறுகதைகள்.
Cixin Liu எழுதிய Remembrance Of Earth’s Past என்ற science fiction trilogy. சீன மொழியில் எழுதப்பட்டது, ஆங்கில மொழியாக்கத்தில் படித்தேன். அருமையான தொடர் நாவல்கள்.

யட்சி

கனவுத்தொழிற்சாலை

The Republic is the miniature version of Plato quotes.. தமிழில் சோ. தர்மன் எழுதிய சூழ் அபாரம். 70, 80 ஆண்டுகளுக்கு முந்தைய தென் தமிழக மக்களின் வாழ்வுமுறையைக் களமாக கொண்டது.
Sapiens: A Brief History Of Humankind - Yuval Noah Harari 2. இந்து தேசியம் - தொ. பரமசிவன் 3. The Brain That Changes Itself - Norman Doidge 4. வால்காவிலிருந்து கங்கை வரை

The God Delusion - Richard Dawkins

The Financial Expert - RK Narayan ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் – ஜெயகாந்தன்

"Be good to yourself" "Poise and power" "Love's way" By Orisonswettmarden.

1.யாப்பருங்கலக்காரிகை (ச.திருஞானசம்பந்தம்) 2. In the Line of Fire -A Memoir (Pervez Mushaataf) 3.நெடுங்குருதி (எஸ்.ரா) குறிப்பு: நெடுங்குருதி வன்மம் சார்ந்தது என எண்ண வேண்டாம். முழுதும் உணர்ச்சி ததும்பல்கள்

உறுபசி -

குற்றப்பரம்பரை –

Learning through Art - Jane Sahi & Roshnan Sahi.
Saipens.

The ministry of utmost happiness.

ஊமைச் செந்நாய்.

Non fiction: A fleeting moment in my Country

வால்கா முதல் கங்கை வரை

Homo sapiens by yuval noah Harari

மீண்டும் என் தொட்டிலுக்கு

When Breath Becomes Air (Memoir) & Sapiens : A Brief History of Humankind (History - World)

Fiction. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன், பூக்குழி - பெருமாள் முருகன், மதில்கள் (மலையாளம்) - வைக்கம் முகமது பஷீர் (read tamil version).

'I, Ramaseshan' by Aadhavan. A novel written in the 80's (or 70's? ) which was far ahead of its time.

Forest – Jeyamohan

வனவாசி! எழுதினது வந்த்யோபாத்யாய! தமிழாக்கம் சேனாதிபதி! அந்தளவுக்கு ரசிக்காது! ஆனா வித்தியாசமான வடக்கிந்திய காட்டுக்கதை!
Fiction 1. The Ministry of Utmost Happiness 2. Into the Water 3. ஹஸ்திணாபுரம் 4. துணையெழுத்து Non Fiction 1. Indira 2. The Omnivore's Dilemma 3. The General Theory of Employment,Interest & Money

In Fiction, English: 'A Dog's Tale' by Mark Twain. தமிழ்: ஜெயமோகனின் 'ஊமைச்செந்நாய்'. Both short reads. But left a deep impression on me. Non-fiction, India after Gandhi. Must read.

meendum jeeno, 6174, nylon kayiru, guide(eng), anithavin kathalgal.
English: Flowers for Algernon Tamizh: மாதொருபாகன்.

Ponniyin Selvan

Saturday, July 8, 2017

What is your ideology?


Man is a political animal. All people are political thinkers- We keep saying it, but how do we equip ourselves with the political thought? Where do we get our resources? Who inspires us to join a political debate and which side we take? All depends on our own experiences- seeing, reading, assumptions and the environment which we grow. But after certain age, when everything is put before us or come to an age where we can use our discretion, do we rethink on our initial beliefs? For example- We all are brought-up as believers; some people at the later stage change their belief system (I’m not terming that believing is right or wrong).

A simple exercise to judge your choice on which side you lean or your favorite political party lean is to plot it on the following linear spectrum of ideology,


In Orwellian terms, the left from the center propagates “All are equal” and the right from center propagates “Some are more equal than others”. This categorization holds good for social thoughts and beliefs too. If you think your religion/race/caste is superior to others, then you become a rightist (conservative). Post-Globalization the boundaries between these ideologies are grayed out. And, democracy even liquidates it further.

So what is your ideology?
Tuesday, July 4, 2017

28 மார்ச் – 2018இரவு 2:30 AM

சுவற்றில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று இந்திய நேரம் மற்றொன்று ஜப்பான் நேரம். Cellphoneனின் தொடர் சிலுங்கலில் கண்விழித்தார் ராம்சுந்தர். அருகில் அவரது மனைவி தூக்கம் கலைந்த நிலையில்,

யாரு phone-ல

ராம்சுந்தர், “சரண் தான் கூப்பிட்டிருக்கான். எடுக்கறதுக்குள்ள cut-ஆயிடுச்சி

கடிகாரத்தை பார்த்த ராதா, “மணி ரெண்டரை, அங்க கால ஆறு. இவ்வளவு lateஆ கூப்பிடமாட்டானே ? Message எதாவது இருக்கா???

மூணு தடவை கால் பண்ணியிருக்கான்…” என்று சொல்லும்போது கைப்பேசி மீண்டும் ஒலித்தது.

என்ன சரண்… என்ன ஆச்சி

மறுமுனையில் இறைச்சல்.

சாரா ஒண்ணும் கேட்கல

அப்பா.. இங்க…

சொல்லு சாரா

… எல்லாம் காணாம போவுது..

என்ன காணோம்.. சரியா கேட்கல

பக்கத்தில் இருந்து ராதா தன்னிடம் கைப்பேசியை தருமாறு சைகை காட்டினாள்.

இந்த வயசுலயே காது கேட்கலயா என்கிட்ட கூடுங்க” என்று சொல்லி கைப்பேசியை வாங்கினாள். ஆனால் call cut-ஆகிவிட்டது.

ராமசிந்தர், “ஏதோ காணாம போகுதுன்னு சொன்னான்!!

நீங்க கால் பண்ணுங்க

பண்ணிடேன் line போகலே

சிறிது நேரம் இருவரும் பேசாமல் கட்டிலில் அமர்ந்திருந்தனர். ராதாவின் கண்களில் லேசான கண்ணீர். ராம்சுந்தர் மீண்டும் மீண்டும் call செய்து கொண்டிருந்தார்.

மணி 3 AM

டீ போட்டுறேன்..” என்று சொல்லி எழுந்தார் ராம்சுந்தர்.

இருங்க நான் போடுறேன்” என்று சொல்லி சமையல் அறைக்கு விறைந்தார் ராதா.

ராம்சுந்தர் TV-யை on செய்து Channel News Asia-வை வைத்தார். திரையில் வருவதை பார்த்து ராதவை உறக்க கத்தி கூப்பிட்டார்.

ஜப்பானில் விடிந்தது அங்காங்கே பொருட்கள் காணாமல் போவதாகவும். வீடுகள், office கட்டிடங்கள் தானாகவே மறைவதாகவும் டிவியில் செய்தி வந்து கொண்டிருந்தது.

அரைமணி நேரமாக இருவரும் வைத்த கண் வாங்காமல் டிவியை பார்த்துக்கொண்டிருந்தனர். டீ போட வைத்திருந்த தண்ணீர் கோதித்து, ஆவியாகி, பாத்திரம் எரியும் நிலையில் இருந்தது. அழைப்பு மணியை யாரோ ஒலித்தப்பின் இருவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டனர். ராம்சுந்தர் கதவை திறந்தார். வாசலில் ப்ரதீப். பக்கத்து flat-ல் குடியிருப்பவர். இரவு shift முடிந்து வந்திருந்தார்.

Uncle news பார்திங்களா. சரண் sir phone பண்ணாறா?

ஹாம்ம்ம். உள்ள வா

சார், Australiaவுல இருந்த என் friend message பண்ணிணான். அங்கேயும் இது மாதிரிதான். செயற்கையான பொருள்கள் எல்லாம் காணாமல் போகுதாம். ஆனா எல்லாம் ஒரே timeல இல்ல கொஞ்சம் கொஞ்சம்மா மறையுமாம். சூரிய ஒளி பட்டதும் எல்லா இடத்துலயும் எல்லா நாட்டுலயும் இப்படி நடக்குமாம்

ப்ரதீப் முகத்தில் பதட்டம்.

சார், நான் ஊருக்கு போறேன். என்ன ஆகுன்னு தெரியலா. Atleast என் அப்பா அம்மா கூடவாவது இருக்பேன். எட்டு மணி நேரம் travel… போவேனே இல்லயோ தெரியாது. உங்க கிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்.”

ராதவுக்கும் ராம்சுந்தருக்கும் தங்களிடம் சரண் இல்லையே என்று வருத்தம். சரணை மீண்டும் பார்போமா இல்லையா என்று கூட தெரியாது. ப்ரதீபாவது தங்களுடன் இருப்பான் என்று நினைத்தால், அவனும் போகிறான்.

ராம்சுந்தர், “சரண நாம இனிமேல் பார்க்க முடியாது போல ப்ரதீப். நீயாவது எங்க கூட இரு

ஹாலில் உள்ள sofa-வில் தன் இரு கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு அழுது உட்கார்ந்தான் ப்ரதீப்.

மணி 5 AM

நகரம் முழுவதும் செய்தி பரவியது. இந்தியாவில் 5:45 மணிக்கு சூரியன் உதிக்கும். அதற்குள் தெவையான பொருட்களை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற பதற்றம் எல்லோரிடமும் இருந்தது. ராம்சுந்தர் தனது இரண்டாம் தள பால்கனியில் நன்று தெருவில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலையும் ஜனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒரு பெரிய குழியை வெட்டிக் கொண்டிருப்பதாகவும். அதில் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை போட்டு, சூரிய ஒளிப்படாமல் மூடிவிடுவதாக முடிவு செய்திருப்பதாக ப்ரதீப் வெளியே சென்று விட்டு வந்து சென்னான்.

வீட்டினுள் TV பார்த்துக்க்கொண்டிருந்த ராதா volumeமை உயர்த்தினார்.

….இரவுக்குள் எல்லாம் மறைந்து விடும். மனிதன் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் துணியை தவிர எல்லாம் மறையும். பூமியில் புதைத்தாலும் தப்பிக்க முடியாது என்று வல்லுனர்க…”- TVயில்

Apartment மறைந்து விட்டால், யார் யாருக்கு எவ்வளவு நிலம் சொந்தமாகும் என்று கணக்கு போட வேண்டும் என்றும் அதற்காக secretary meeting போட்டிருப்பதாகவும் apartment watchman வந்து கூறினார்.

ராம்சுந்தர் சிரித்துக்கோண்டே வருவதாக சொன்னார்.

மணி 5:45 AM

முதல் சூரிய ஒளி நகரத்தின் மீது விழ ஆரம்பித்தது. 
முடிவின் ஆரம்பம்!!

நாள் 28ஆம் தேதி மார்ச் 2018
மணி 5:46 AM
இடம் – செO

************

[Alpha Centauri – பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம். பூமியில் இருந்து ஒளி புறப்பட்டல் Alpha Centauri சென்றடைய 4.4 வருடங்கள் ஆகும்]

இடம்- Proxima b (Alpha Centauriயாவின் ஒரு கோள்)
பூமி நேரம்- 2234ம் வருடம். 12 February. மதியம் 1 PM.

ஒரு பெண்ணின் குரல்,” இடம்- செ O வா! இந்தியா எங்க இருக்கு?

ஆண்- தெரியாது. என்ன இது?
பெண்- காற்றில் பறந்து வந்த paperல ஏதோ கதை மாதிரி இருக்கு!
ஆண்- எங்க நான் படிக்கட்டா?
பெண்- சுமாராதான் இருக்கு. வா போகலாம்.
அவர்கள் உட்கார்ந்திருந்த வண்டி புறப்பட. படித்த காகிதத்தை கசக்கி கீழே போட்டாள்.

*********