அ முதல் ஃ தொடரை தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் தான் “உன்னால் முடியும் தம்பி”. அதுவே இப்பதிப்பின் பெயராகவும் படத்தின் பெயராகவும் வைத்து எழுதுகிறேன்.
சமுதாயத்தில் இருக்கும் எழை பணக்காரன் மற்றும் சாதிய எற்றத்தாழ்வுகளை பேசும் இப்படத்தில் முதல் காட்சியில் வரும் நிகழ்வு படம் முழுவதும் நம் கதாநாயகனை தொடர்ந்து வருகிறது.
குளத்தில் உள்ள படிகட்டுகளில் கண்பார்வையற்ற ஒரு பிச்சைகாரிக்கு ஒரு வாழைபழம் கிடைக்கிறது. அதை எடுக்க முற்படும் போது கை தவறி அடுத்த படிகட்டில் விழுந்து விடுகிறது. இப்படி தவறி கொண்டே இருக்கையில் நம் கதாநாயகன் (சிறுவன்) இதை பார்த்துக்கொண்டே மந்திரத்தை சொல்லிக்கொண்டு நடந்து செல்கின்றான்.
பிச்சைகாரி பழத்தை எடுப்பாளா என்று கண்களில் ஒரு குறும்பு பார்வையும் நமட்டு சிரிப்புமாய் நடந்து செல்லும் சிறுவன் அவளுக்கு உதவி செய்யாமல் கடந்து செல்கின்றான்.
பொதுவாக ஒரு படத்தில் கதாநாயகனை அறிமுகம் செய்யும் போது பிறருக்கு உதவி செய்பவனாக சித்தரிப்பது வழக்கம். அப்பேர்பட்ட திரைப்படங்களுக்கு நடுவில் இப்படத்தில் பாலசந்தர் வழக்கம்போல் வித்தியசமாக நாயகனை சித்தரித்துள்ளார்.
இப்படத்தை பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment