சம்பா நடனத்திர்க்கும் கால்பந்திர்க்கும் புகழ்பெற்ற பிரேசில் நாட்டு திரைபடத்தைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரெம்ப நாளாய் ஆசை. சிட்டி ஆப் காட் (City of God) பிரேசிலின் மிகவும் பிரபலமான படம். அதை தவிர்த்து வேறு படம் பார்க்க வேண்டும் என்று நான் தேடுகயில் கிடைத்தபடம் தான் “ஓர்ஃபி நீக்ரோ”.
போர்துகிஸிய மொழியில் எடுக்கப்பட்ட படம். ஏன் போர்துகிஸிய மொழி என்று நினைப்பவர்கள் இதை படிக்கவும், எனக்கு தெரியும் எனில் இரண்டு-மூன்று வரிகள் தாவி செல்லவும்.
இந்தியா எப்படி ஆங்கிலேயர்களிடம் காலனியாக இருந்ததோ, அதுபோல பிரேசில் போர்துகலின் காலனியாக இருந்தது. போர்துகிஸிய மொழி பிரேசிலின் தேசிய மொழியாகவே மாறிவிட்டது.
கதை
கிரேக்க நாட்டில் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒவிட் (Ovid) என்பவர் எழுதிய Metamorphoses என்ற புத்தகத்தில் வரும் ஒரு பகுதியின் கதைதான் இப்படம்.
ஓர்பியஸ் (Orpheus) ஒரு மாபெரும் இசைக் கலைஞன். அவனது மனைவியான எருடைஸ் (Eurydice) பாம்பு கடித்து இறந்து விடுகின்றாள். மனம் உடைந்த ஓர்பியஸ் தான் இசையால் இறந்தவர்கள் இருக்கும் உலகத்துக்கு செல்கின்றான். அங்கு இருக்கும் கடவுளை தன் இசையால் வசப்படுத்துகிறான். ஆனால் ஒரு நிபந்தனையுடன் எருடைஸ்-சை அனுப்புகின்றனர். ஓர்பியஸ் முன்னால் செல்ல அவன் பின்னால் எருடைஸ் செல்லவேண்டும். அவர்கள் இருவரும் பூலோகம் சென்று சேரும் வரை அவன் அவளை திரும்பிபார்க்க கூடாது.
கிரெக்க புராணகதையை இக்காலத்திர்கு எற்றவாரு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ (Rio) நகரின் புறநகர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. டிராம் (Tram) கண்டேக்டர்ராக இருக்கும் ஓர்பியஸ் மீரா என்பவளிடையே காதல். மீராவொ ஓர்பியஸ்சின் பணத்தின் மீதுதான் குறி. புகழ்பெற்ற ரியோ கார்னிவலில் (Rio Carnival) ஓர்பியஸ் எருடைசை சந்திக்க அவர்களிடையே காதல் மலர்கிறது. இதை தடுக்க மீரா முயற்சி செய்ய, இவர்களிள் யாருடைய காதல் வெற்றிபெற்றது என்பது தான் மீதி கதை.
சம்பா நடனம், இசை மற்றும் பிரேசிலின் புறநகர வாழ்கை என்று நிகல்காலத்திர்கு எற்றவாரு கிரேக்க புராணக்கதையெய் இழைத்திருப்பது மிகவும் அருமை.
No comments:
Post a Comment