இப்படத்தைப்பற்றி பலரும் பெரிய பெரிய research செய்து எழுதியுள்ளனர். இந்நிலையில் இவன் என்ன புதுச சொல்லப்போகிறான் என்று சொல்லும் உங்க mind voice எனக்கு கேட்குது. புதிதாக சொல்வதர்க்கு வேறு எதும் இல்லை என்பது வாஸ்துவம்தான், ஆனால் எனக்கு இதில் பிடிக்கதவை மற்றும் எனக்கு கொஞ்சம் நெருடலாக உள்ளவையை ஒரு பதிவாக எழுத ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.
இதை படித்தவுடன் ( அல்லது படிக்காமல் ) கமல் ரசிகர்களோ அல்லது ஹே ராம் படத்தை தீர்த்தமாக குடித்தவர்களோ தங்கள் போர்வளை தீட்ட வேண்டாம். அதை அப்படியே நாலா மடித்து pant pocket-ல் வைத்துகொள்ளவும். எனக்கும் கமலின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த 10 தமிழ் திரைப்படங்களில் 3 – 4 கமல் படங்கள் அடங்கிவிடும்.
இப்போது படத்திற்குள் செல்வோம்.
எதிர்பாராமல் சந்திப்பது
திடீர் திடீர் என்று சாகேத் ராம் தம் நண்பர்களை எதிர்பாராமல் சந்திப்பது கொஞ்சம் சினிமாதனமாக உள்ளது ( சினிமாவில் சினிமாதனமாக இல்லாமல் serial-தனமாகவா இருக்கும் ). இப்படி எதிர்பாராமல் சந்திப்பது கதையை நகர்த்த சுளுவாக (Easy) கையளப்படும் ஒரு யுக்தியாகவே எண்ணுகின்றேன்.
- அப்யங்கரின் மூன்றாம் சந்திப்பு. காந்தியைப் பற்றி சாகேத் ராமிர்கு முளைச்சலவை செய்பவன் அப்யங்கர். ஆகையால் இந்த சந்திப்பு தவிர்கமுடியாது. ஆனால் இதை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம்.
- இரண்டாவது, லால்வனியை Railway gate-ல் சந்திப்பது. இதை முற்றிலுமாக தவிர்த்து இருக்கலாம். இந்தக் காட்சியை நீக்கிவிட்டால் கதை அப்படியேதான் இருக்கும்.
- மூன்றவது, அம்ஜத்தை டெல்லியில் சந்திப்பது. இந்த சந்திப்பு சாகேத் ராமின் வாழ்கையை மாற்றியமைக்கும். ஆனால் இதை அவ்வளவு Easy-யாகவும் எதிர்பாராமலும் சந்திக்க வைத்திருக்ககூடாது. அவ்வளவு பெரிய நகரம் அதிலும் ஊரடங்கு உத்தரவு வேறு. இந்நிலையில் இரண்டு நண்பர்கள் எதிர்பாராமல் சந்திப்பது யதார்ததுக்கு கொஞ்சம் முரணாக உள்ளது. இதை வேறு மாதிரியாக கையாண்டு சந்திக்க வைத்திருக்கலாம்.
அடுத்த பதிவில் வேறு சில எனக்கு ஒவ்வாத scene-களை பற்றி பார்போம்.
Other Revisiting Tamil Films. - 1. Michael Madana Kama Rajan | 2. May Maadham | 3. Taj Mahal | 4. Baashha
No comments:
Post a Comment