Sunday, June 29, 2014

Hey Ram - Post 3/4



பிரபலமான ஒட்டலுக்கு சென்று மதியம் சாப்பிடலாம் என்று உட்கார்ந்தால் ஒரு பெரிய தட்டில் சிறு சிறு cup-புகளில் இரண்டு பொறியல், கூட்டு, சாம்பார், கார குழம்பு, இரண்டு இனிப்புகள், ரசம், அப்பளம், தயிர், மொர், பொடி, எண்ணை, ஊரூகாய், சாதம், ஒரு சப்பாதியுடன் குருமா, வடாம், soup, ice cream, வாழை பழம் மற்றும் beeda. இதுவே அசைவ ஒட்டல் என்றால் அது பேரிய list.

இப்படிபட்ட ஒரு menu-தான் ஹே ராம். சிலர் பிரம்மித்தனர், சிலர் தலைதெரிக்க ஓடினர்.

இரண்டு parota மற்றும் half-plate குஸ்கா போன்ற content உள்ள படங்களை பார்த்த mega-serial ஆன்டிகள் மற்றும் அரை-trouser பையன்களும் இந்த ஓட்டத்தில் வெற்றிபேற்றனர்.

ஓட்டத்துக்கு காரணம்

வரலாற்றுப்படம், வட இந்திய character-கள் தமிழில் பேசினாலும் ஹிந்தி பேசுவதுபோல் கேட்கிறது, on top ஆங்கிலம், மராத்தி, வங்காளம், அக்காலத்து அய்யங்கார் ஆத்து தமிழ் வேறு. இதற்கு இடையே symbolism, allegory, analogy- குறியீடுகள் வேறு.

90% flashback-ல் நடக்கும் வரலாற்றுக்கதையில் இந்த analogy-குறியீடுகள் வருவது தவிர்க்க முடியாது, ஆனால் மீதி இருக்கும் 10%-ல் ஆவது கொஞ்சம் light-ஆக கதையை நகர்த்தி இருக்கலாம். ஆனால் அங்கும் heavy- முஸ்லிமாக வரும் அப்பாஸ் மற்றும் நாசர், Dec-6, ஹிந்து-முஸ்லிம் கலவரம், போலிஸ் துப்பாக்கி சுடு, காந்தியை பற்றி நடக்கும் பேச்சுக்கள், காந்தியோட பேரன்… எப்பா மூச்சுமுட்டுது.

இந்த 10% நிகழ்காலத்து கதையையாவது ஒரு சதார்ண நாளாக வைத்திருக்கலாம்.

கடைசி பகுதி தொடரும்.

Hey Ram - Post 1 - Post 2

**Above image graphics by the blogger

No comments:

Post a Comment