Sunday, June 22, 2014

Hey Ram - Post 2/4



நான் இங்கு கூறிப்பிடவுள்ள அல்லது எற்கனவே முதல்பதிர்வில் கூறிப்பிட்ட சில அம்சங்கள் இப்படம் வர்த்தக ரிதியாக வெற்றிப்பெறாமல் மற்றும் வெகுஜனத்திர்கு reach ஆகாமல் தோல்வி அடைந்தர்க்கு நான் தேடிப்பிடிக்கும் காரணங்களாகவும் இருக்கலாம்.

இதை நான் அரைமணி நேரம் படத்தை பார்த்துவிட்டு interval-லின் போது ஆயா வடை சுட்டு வெச்சிருப்பா என்று ஓட நினைக்கும் அரை-trouser போட்ட ஒரு பையனின் கோணத்தில் பார்த்து எழுத முயற்சித்துள்ளேன்.

கமல் என்றாலே பலமுகங்கள் கோண்டவர். கதாபாத்திரங்களுக்கு எற்றவரு உடை, முக அமைப்பு, hair style, உடல் அமைப்பு போன்றவையை மாற்றிக் கொள்வார் என்று எல்லோருக்கும் தேரிந்தது. இந்த வரிசையில் ஹே ராமில் பல get up-கள். 15 நிமிடத்திர்கு ஒரு முறை சாகேத் ராமின் தோற்றம் மாறும். 

ஒரு சாகேத் ராமின் பிம்பத்தை உள்வாங்கி மனதில் நிற்பதர்குள் வேறு ஒரு தோற்றம் மாறிவிடுகிறது. இப்படி தோற்றத்தை மாற்றுவது சாகேத் ராமின் மனநிலையை பிரதிபலித்தாலும் இது சாமான்யனுக்கு பல சமயம் குழப்பமாகவும் பிடி கொடுக்காமலும் படம் நகர்கிறது.

கன்னத்தில் செத்துப்போன ஈ-யை வைத்து அல்லது தூக்கி முடியை சீவிய ஒரு character, மற்றோரு character side-வகுடுடன் என்று இரண்டு character-கள் இடையே வேறுப்பாட்டை கொண்டுவர நினைக்கும் ஹீரோக்களை பார்த்தவர்களுக்கு இப்படி scene-by-scene get-up ஒரு வித distraction-னாக (கவனச்சிதறல்) இருக்கிறது.

அடுத்த பதிவில் வேறு சில எனக்கு ஒவ்வாத scene-களை பற்றி பார்போம்.



No comments:

Post a Comment