Monday, July 11, 2016

After The Floods



Anthology என்பதை ஆங்கிலத்தில் “Collection of literary passages” என்பார்கள், தமிழில் இதை “இலக்கிய தொகுப்பு” என்று கூறலாமா?. இங்கு இலக்கியம் என்பது கதை அல்லது கவிதை இரண்டையும் குறிக்கும்.

கடந்த ஆண்டு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகள் பெரு மழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அதை மைய்யமாக கொண்டு, The Chennai Bloggers Clubல் உள்ள வலைப்பூவில் எழுதுபவர்கள் எழுதியுள்ள 21 கதைகளின் தொகுப்புதான் After The Floods.

21 கதைகளை, சிறுகதை அல்லது சிறிய கதை என்ற வகையில் பிரிக்கலாம். பெரும்பாலான கதைகள் வெள்ளத்தின் போது எழுந்த மனிதாபிமானத்தை பின்னனியாக வைத்து எழுதியுள்ளனர். ஒரு காதாப்பாத்திரம் வெள்ளத்தில் சிக்குகிறது ஒரு காதப்பாத்திரம் அவர்களை காப்பாற்றுகிறது. சூழலும் களமும்தான் மாறுகிறது. இப்படி கதைகள் சிறிய கதை என்ற வகையில் இருக்கிறது (சிறுகதை அல்ல).

அடுத்தடுத்து வரும் இப்படியான கதைகளைப் படிக்கும் போது ஒரு வித அலுப்புத்தடுகிறது. Message அல்லது கருத்து செல்வது போன்று உள்ளது.

சில முயற்சிகள் மாறுபட்டுள்ளது. சாய் ஸ்ரீராம் எழுதியுள்ள 1.9.8.9 (ஆம் இது கதையின் பெயர்), இன்ன வரை எனக்கு இந்த கதை புலப்படவில்லை. அதனால் இதற்கு புத்திசாலித்தனம் என்ற சாயத்தைப் பூசி நவராத்திரி கொலுவின் மேல் படியில் வைத்துவிடலாம். கவிப்பிரியா மூர்த்தியின் CHENNAI 600013 மற்றும் க்ளெமெண்ட் வில்லியம்ஸின் The High Riseசும் சென்னை மக்களிடம் இருக்கும் வர்க்க பேதங்களை நினைவுப்படுத்துபவையாக உள்ளது.

ஒரே மாதிரியாக போகும் கதைகளுக்கு நடுவே கார்த்திக் பசுபதியின் Lucky Who என்ற கதையில் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து வரும் ஒரு முனிவர், சென்னை வெள்ளத்தில் இரண்டு சூப் பாய்சை சந்திப்பது நகைச்சுவையாக உள்ளது.

எந்த விதமான message/கருத்து சொல்லாமல் ஸ்ரீலட்சுமி இந்திரசேனனின் Rains, Dairymilk, Chocolates and Us என்ற கதையில் காலில் ரெக்கை கட்டி எப்போதும் பறக்கும் கணவன் மனைவி வெள்ளத்தால் வீட்டில் அடைப்பட்டு தங்கள் அன்னியோனியத்தை எப்படி வளர்த்துக்கொண்டார்கள் என்று கொஞ்சம் பூசுனாப்புல சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளம் வந்தது fact, மனிதநேயம் எழுந்தது fact, இதையெல்லாம் ஆவணப்படுத்திய கதைகள் வெள்ளத்திற்க்கு காரணமான மனிதனின் பேராசை, அரசு மற்றும் அதன் இயந்திரங்களின் கையாலாகத்தனத்தைப் பற்றி கேள்விக்கேட்டிருந்தால் இந்த anthology முழுமை அடைந்திருக்கும்.

எல்லா கதைகளைப்பற்றியும் இங்கு எழுதினால் நீங்க தூக்கியடிச்சிட்டு போயிடுவீங்க, அதனால் இந்தப் புத்தகத்தை இங்கு வாங்கி படிக்கவும்- http://sixthsensepublications.com/index.php/after-the-floods.html






No comments:

Post a Comment