Tuesday, July 4, 2017

28 மார்ச் – 2018இரவு 2:30 AM

சுவற்றில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று இந்திய நேரம் மற்றொன்று ஜப்பான் நேரம். Cellphoneனின் தொடர் சிலுங்கலில் கண்விழித்தார் ராம்சுந்தர். அருகில் அவரது மனைவி தூக்கம் கலைந்த நிலையில்,

யாரு phone-ல

ராம்சுந்தர், “சரண் தான் கூப்பிட்டிருக்கான். எடுக்கறதுக்குள்ள cut-ஆயிடுச்சி

கடிகாரத்தை பார்த்த ராதா, “மணி ரெண்டரை, அங்க கால ஆறு. இவ்வளவு lateஆ கூப்பிடமாட்டானே ? Message எதாவது இருக்கா???

மூணு தடவை கால் பண்ணியிருக்கான்…” என்று சொல்லும்போது கைப்பேசி மீண்டும் ஒலித்தது.

என்ன சரண்… என்ன ஆச்சி

மறுமுனையில் இறைச்சல்.

சாரா ஒண்ணும் கேட்கல

அப்பா.. இங்க…

சொல்லு சாரா

… எல்லாம் காணாம போவுது..

என்ன காணோம்.. சரியா கேட்கல

பக்கத்தில் இருந்து ராதா தன்னிடம் கைப்பேசியை தருமாறு சைகை காட்டினாள்.

இந்த வயசுலயே காது கேட்கலயா என்கிட்ட கூடுங்க” என்று சொல்லி கைப்பேசியை வாங்கினாள். ஆனால் call cut-ஆகிவிட்டது.

ராமசிந்தர், “ஏதோ காணாம போகுதுன்னு சொன்னான்!!

நீங்க கால் பண்ணுங்க

பண்ணிடேன் line போகலே

சிறிது நேரம் இருவரும் பேசாமல் கட்டிலில் அமர்ந்திருந்தனர். ராதாவின் கண்களில் லேசான கண்ணீர். ராம்சுந்தர் மீண்டும் மீண்டும் call செய்து கொண்டிருந்தார்.

மணி 3 AM

டீ போட்டுறேன்..” என்று சொல்லி எழுந்தார் ராம்சுந்தர்.

இருங்க நான் போடுறேன்” என்று சொல்லி சமையல் அறைக்கு விறைந்தார் ராதா.

ராம்சுந்தர் TV-யை on செய்து Channel News Asia-வை வைத்தார். திரையில் வருவதை பார்த்து ராதவை உறக்க கத்தி கூப்பிட்டார்.

ஜப்பானில் விடிந்தது அங்காங்கே பொருட்கள் காணாமல் போவதாகவும். வீடுகள், office கட்டிடங்கள் தானாகவே மறைவதாகவும் டிவியில் செய்தி வந்து கொண்டிருந்தது.

அரைமணி நேரமாக இருவரும் வைத்த கண் வாங்காமல் டிவியை பார்த்துக்கொண்டிருந்தனர். டீ போட வைத்திருந்த தண்ணீர் கோதித்து, ஆவியாகி, பாத்திரம் எரியும் நிலையில் இருந்தது. அழைப்பு மணியை யாரோ ஒலித்தப்பின் இருவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டனர். ராம்சுந்தர் கதவை திறந்தார். வாசலில் ப்ரதீப். பக்கத்து flat-ல் குடியிருப்பவர். இரவு shift முடிந்து வந்திருந்தார்.

Uncle news பார்திங்களா. சரண் sir phone பண்ணாறா?

ஹாம்ம்ம். உள்ள வா

சார், Australiaவுல இருந்த என் friend message பண்ணிணான். அங்கேயும் இது மாதிரிதான். செயற்கையான பொருள்கள் எல்லாம் காணாமல் போகுதாம். ஆனா எல்லாம் ஒரே timeல இல்ல கொஞ்சம் கொஞ்சம்மா மறையுமாம். சூரிய ஒளி பட்டதும் எல்லா இடத்துலயும் எல்லா நாட்டுலயும் இப்படி நடக்குமாம்

ப்ரதீப் முகத்தில் பதட்டம்.

சார், நான் ஊருக்கு போறேன். என்ன ஆகுன்னு தெரியலா. Atleast என் அப்பா அம்மா கூடவாவது இருக்பேன். எட்டு மணி நேரம் travel… போவேனே இல்லயோ தெரியாது. உங்க கிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்.”

ராதவுக்கும் ராம்சுந்தருக்கும் தங்களிடம் சரண் இல்லையே என்று வருத்தம். சரணை மீண்டும் பார்போமா இல்லையா என்று கூட தெரியாது. ப்ரதீபாவது தங்களுடன் இருப்பான் என்று நினைத்தால், அவனும் போகிறான்.

ராம்சுந்தர், “சரண நாம இனிமேல் பார்க்க முடியாது போல ப்ரதீப். நீயாவது எங்க கூட இரு

ஹாலில் உள்ள sofa-வில் தன் இரு கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு அழுது உட்கார்ந்தான் ப்ரதீப்.

மணி 5 AM

நகரம் முழுவதும் செய்தி பரவியது. இந்தியாவில் 5:45 மணிக்கு சூரியன் உதிக்கும். அதற்குள் தெவையான பொருட்களை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற பதற்றம் எல்லோரிடமும் இருந்தது. ராம்சுந்தர் தனது இரண்டாம் தள பால்கனியில் நன்று தெருவில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலையும் ஜனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒரு பெரிய குழியை வெட்டிக் கொண்டிருப்பதாகவும். அதில் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை போட்டு, சூரிய ஒளிப்படாமல் மூடிவிடுவதாக முடிவு செய்திருப்பதாக ப்ரதீப் வெளியே சென்று விட்டு வந்து சென்னான்.

வீட்டினுள் TV பார்த்துக்க்கொண்டிருந்த ராதா volumeமை உயர்த்தினார்.

….இரவுக்குள் எல்லாம் மறைந்து விடும். மனிதன் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் துணியை தவிர எல்லாம் மறையும். பூமியில் புதைத்தாலும் தப்பிக்க முடியாது என்று வல்லுனர்க…”- TVயில்

Apartment மறைந்து விட்டால், யார் யாருக்கு எவ்வளவு நிலம் சொந்தமாகும் என்று கணக்கு போட வேண்டும் என்றும் அதற்காக secretary meeting போட்டிருப்பதாகவும் apartment watchman வந்து கூறினார்.

ராம்சுந்தர் சிரித்துக்கோண்டே வருவதாக சொன்னார்.

மணி 5:45 AM

முதல் சூரிய ஒளி நகரத்தின் மீது விழ ஆரம்பித்தது. 
முடிவின் ஆரம்பம்!!

நாள் 28ஆம் தேதி மார்ச் 2018
மணி 5:46 AM
இடம் – செO

************

[Alpha Centauri – பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம். பூமியில் இருந்து ஒளி புறப்பட்டல் Alpha Centauri சென்றடைய 4.4 வருடங்கள் ஆகும்]

இடம்- Proxima b (Alpha Centauriயாவின் ஒரு கோள்)
பூமி நேரம்- 2234ம் வருடம். 12 February. மதியம் 1 PM.

ஒரு பெண்ணின் குரல்,” இடம்- செ O வா! இந்தியா எங்க இருக்கு?

ஆண்- தெரியாது. என்ன இது?
பெண்- காற்றில் பறந்து வந்த paperல ஏதோ கதை மாதிரி இருக்கு!
ஆண்- எங்க நான் படிக்கட்டா?
பெண்- சுமாராதான் இருக்கு. வா போகலாம்.
அவர்கள் உட்கார்ந்திருந்த வண்டி புறப்பட. படித்த காகிதத்தை கசக்கி கீழே போட்டாள்.

*********

No comments:

Post a Comment