நான் உங்க எல்லா படத்தையும் பாத்ததில்ல..
நான் உங்க தீவிர ரசிகனும் இல்ல..
ஆனால் இந்த புத்தகம் படிச்சப்புறம் இதேல்லாம் நடத்துடுமோனு பயமா இருக்கு!
மேலே கூறியுள்ளது இந்த கட்டுரையை கொஞ்சம் டிரமாடிக்க (dramatic) தொடங்க வேண்டுமேன்று தோன்றி எழுதப்பட்டது. அதில் வேறு பார்வை மதிப்பு ஏதும் இல்லை.
மணி ரத்னம், ஏ. ஆர். ரஹமான், பி. சி. ஸ்ரீராம் போன்றவர்களின் டி.வி. பேட்டிகளை நான் கஷ்டப்பட்டுதான் பார்ப்பேன். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு புரியாது. அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அவர்கள் வாயிலேயே முடிந்துவிடும். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி சுமார் 500 பக்க புத்தகமாக எழுதுவது ஒரு பெரும் முயற்சி.
மணி ரத்னத்தின் திரைகதை எழுதும் முறையைப் போலவே இந்த புத்தகமும் முதலில் ஆங்கிலத்தில் பரத்வாஜ் ரங்கன்னால் எழுதப்பட்டது. பிறகு அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழிப்பொயர்த்துள்ளார்.
தலைப்பில் உள்ளது போலவே புத்தகம் கேள்வி-பதில் நடையில் உள்ளது. ரங்கன் கேள்வி கேட்க மணி ரத்னம் பதில் கூறுகின்றார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு படத்தைப்பற்றி விவாதிக்கின்றனர். பல்லவி அனுபல்லவி, உணரு, பகல்நிலவு, இதயகோவில் மட்டும் ஒரே அத்தியாயத்தில்.
முகவுரை எழுதியிருப்பவர் ரஹமான். மிகவும் வெளிப்படையாக எழுதியுள்ளார். இளையராஜா எழுதியிருக்கலாம்!
தான் வளர்ந்த சுழ்நிலை, படிப்பு, குடும்பம், திரைப்படத்துறைக்குள் நுழைந்ததும் சந்தித்த தோல்விகள், வெற்றிகள் என்று தொடங்குகிறது.
ஆரம்பக் காலத்தில் தனக்கு ஊக்கம்மளித்த பாலு மகேந்திரா, பாரதி ராஜாவைப் பற்றி கூறிப்பிடுள்ளார்.
ரங்கன் எழுதிய முன்னுரையிலேயே தெரிந்துவிடும் அவர் எப்படி மணிரத்னம் என்ற ஆளுமையின் மீதும் மற்றும் அவரது படங்கள் மீதும் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று. இந்த ஈர்பாலோ அல்லது ஒரு சினிமா விமர்சகர் என்ற தனது ஆளுமையை நிருபிக்கவோ சில சமயம் துருவி துருவி உள்ளார்ந்த குறியிடுகள் உள்ளக் கேள்விகளை கேட்கும் போது, மணிரத்னம் அதர்க்கு ‘என் நீங்கள் அறிவுஜீவித்தனமாக தேவையற்றதைப் பேசுகிறிர்கள்’ என்பது பொன்ற பதில் கூறுவது அருமை.
இளையராஜவின் assembly line போன்ற வேகத்தில் எப்படி பின்னனி இசையமைப்பார் என்பதை சுவாரசியமாக பகிர்கிறார்.
மேலும் ராஜவும் ரஹமானும் வேலைச் செய்யும் விதத்தைப்பற்றி விவரித்துள்ளார். பி. சி. ஸ்ரீராம், தோட்டதரணி, சந்தோஷ் சிவன், கமல், ரஜினி போன்றவர்களிடம் பணியாறியதைப்பற்றி பகிர்ந்துக்கொள்கிறார்.
என்னதான் நாம சினிமாவை துரத்தி துரத்திப் பார்த்தாலும் சினிமாவைப்பற்றி (கிசுகிசு போன்றவையல்ல..) படிப்பது எளிதல்ல. பெரும்பாலும் சினிமாவைப்பற்றிய கட்டுரைகளும் புத்தகங்களும் factualஆக அல்லது அப்படங்கள் எப்படி உருவாகியது என்று மட்டும் இருக்கும். Character study (கதாப்பத்திரத்தை ஆராய்வது) இருக்காது. அவ்வளவு ஏன் வாராவாரம் வரும் சினிமா விமர்சனகளிளும் character study இருக்காது. ஆனால் இதில் சில முக்கிய படங்களுக்கு ரங்கனும்-ரத்னமும் அந்த அந்த படங்களில் வரும் முன்னனி பாத்திரங்களின் தன்மைகளைப் பற்றி விவாதித்துள்ளார்.
ஒரு விஷயம் தெளிவாகிறது. மணிரத்னம் தன் படங்களின் மூலமாக யாரையும் மாற்ற வேண்டும் அல்லது எதாவது message சொல்லவேண்டும் என்று எப்போதும் எடுத்ததில்லை. புளித்துப்போன பழய பாணியை பின்பற்றாமல் மாற்று (சில சமயம் புதியது) சிந்தனைக்கு தன்னைத்தானே ஆட்கொள்கிறார். இதையேத்தான் அவரது படத்திலும் எதிரோலிக்கும். இதை மீறியும் மணிரத்னம் template என்று ஒன்று உள்ளது. அது வேறு விவாதத்தில் பார்க்கலாம்.
புத்தகத்தில் இருந்து சில,,,,
Budget காரணமாக பல்லவி அனுபல்லவிக்கு ராஜா வாங்கிய சம்பளம் அவர் அப்போது வாங்கியதில் 5ல் ஒரு பங்கு சம்பளம் மட்டுமே.
‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடப் போகிறேன்” என்று சொன்ன மணிரத்னாத்தை இழுத்து பிடித்து பல்லவி அனுபல்லவியை முடிக்க செய்தவர் பாலு மகேந்திரா.
மசாலா என்பது என்ன கெட்டவார்த்தையா? அது ஒரு flavor.
எஸ்தர் என்ற சிறப்புக் குழந்தையை வைத்து 2-3 நாட்கள் test shoot எடுத்தோம். அதை வைத்து ஷாமிலியை நடிக்க வைத்தோம்.
Hitchcock போலச் செயல்பட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் நான் Hitchcock இல்லையே.