Sunday, May 25, 2014

நெப்ரெஸ்கா ( அமெரிக்கா, 2013)



நெப்ரெஸ்கா (Nebraska) என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தின் பெயர். இதை எதற்கு படத்தின் தலைப்பாக வைத்தனர்? படம் ஆரம்பிக்கும் போதே சுலபமாக புரிந்துவிடும்.

சில வருடங்கள் முன்பு எங்க தேருவில் ஒருவருக்கு பம்பாயில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் கோடி ரூபாய் வென்றிருப்பதாக இருந்தது. தேருவில் ஒரு சலசலப்பு. அவ்வளவாக உலகஞான்ம் (எமாற்றுவது) இல்லாத அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு யாரோ அவரிடம் இக்கடிதம் போலியானது என்று விளக்கிவுள்ளனர். இதை புரிந்து கொண்டு அக்கடிததை கீழித்து போட்டார். அப்படி கீழிக்காமல் அதை உண்மை என்று நம்பி பம்பாய்க்கு அவர் பயணித்து இருந்தால் என்வாயிருக்கும். அது தான் நெப்ரெஸ்கா-வின் கதை.

வுட்டி (Woody) என்ற வயதானவர் பில்லிங்கஸ், மொன்டேனா-வில் (Billings, Montana) வசித்து வருகின்றார். அவருக்கு மேல் கூறிப்பிட்டது போல் ஒரு கடிதம் வருகின்றது. லிங்கன், நெப்ரெஸ்கா-விற்கு (Lincoln, Nebraska) வந்து பணத்தை பெற்றுக்கொள்ளாம் என்பதை நம்பி, விட்டில் இருப்பவர்கள் சொல்வதை கேட்காமல் நெப்ரெஸ்காவுக்கு நடந்தே செல்ல முர்படுகின்றார். வுட்டி-யை சமாளிக்க அவரது இளைய மகன் ஜஷ் (Josh) அவரை நெப்ரெஸ்கா-விர்கு காரில் அழைத்து செல்கின்றான். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக்கதை.

போலியான கடித்தை நம்பி ஒருவன் பயணிக்கிறான். இதில் என்ன பெரிதாக சொல்லப்போகின்றனர் என்று நினைத்து படம் பார்க்க உட்கார்ந்த என்க்கு வந்தது எமாற்றம் அல்ல, மாறாக ஆச்சரியம்தான் வந்தது. 

ஒரு கார் விளம்பரத்தில் வரும் ஜிங்கில் (Jingle)- ரொம்ப தூரம் சென்றால் உறவுகள் நெருக்கமாகும். இதையே தான் இப்படத்திலும் சொல்லியிருக்கின்றனர். தந்தை-மகன் உறவு, வயதான் தம்பதிகள் இடையே நடக்கும் சிறு சிறு விட்டுக்கொடுத்தல், உறவினர்களின் பேராசை போன்ற serious விசயங்களை நகைசுவையாக சொல்லியிருக்கின்றனர்.

ஒருமுறை அல்ல பலமுறை பார்க்க வேண்டும் என்று தோன்றும் படங்களில் இப்படத்தை சேர்க்கலாம்.


2 comments:

  1. This deserved a better show at the Oscars - a wonderful tribute to fathers - sons and dysfunctional families everywhere.

    ReplyDelete
  2. @Mahesh

    Yes. A real good film. Unfortunately Oscars wont consider these kind of films. The it can get is a nomination.

    ReplyDelete