“என்ன புக்கு வாங்கலாம்”
கொளுத்தும் மதிய வெயிலில் வருத்தத்துடன் வண்டியை பார்கிங்கில் விட்டு விட்டு அப்படியே கால்லார நடக்கையில் தோன்றியது இந்த யோசனை,
“என்ன புக்கு வாங்கலாம்”
”சரி, எதையோ வாங்கலாம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு நடக்கயில மேடையில் இருந்து ஒரு குரல். எங்கேயோ கேட்ட குரல்!
சன் டிவியில் நியூஸ் வாசிக்கும் ஜெய்ஸ்ரீ சுந்தரோ அல்லது சுபஸ்ரீ சுந்தரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். மணிமேகலை பிரசுரம் சார்பில் 39 புத்தகங்களை சப்ஜாடாக வெளியிட்டுக்கொண்டிருந்தனர். மேடையில் 39 எழுத்தாளர்கள், 4-5 chief guests என்று 50 பேர் மேடையில் இருந்தனர். பார்ப்பதற்க்கு எதோ அரசியல் கட்சி (அதிமுக தவிர) மேடைப்போல் இருந்தது.
எல்லா வருடங்கள் போலவே, இந்த வருடமும் மெயின் அரங்கத்தில் வரிசையாக கடைகள் (700), வெளியில் புட் கோர்ட் (பஜ்ஜி சிறந்ததா – பனி பூரி சிறந்ததா என்று தீர்ப்பளிப்பார்கள்), அப்புறம் மேடை- நூல் வெளியிடு, retired judges, TV புகழ் அரசியல் நடுநிலையாளர்கள், சினிமாவில் புரட்சி செய்தவர்கள் என்று யாராவது பேசுவார்கள்.
காலச்சுவடு, நீயு ஹொரைசான் (கிழக்கு) போன்ற பெரிய பதிப்பகங்கள் 4-5 stallகளில் தங்கள் வெளியீடுகளை நிரப்பியிருந்தார்கள். ஆனந்த விகடன் “தடம்” இதழுக்கு மட்டும் ஒரு special stall வைத்திருந்தார்கள்.
”சிங்கப்பூர் இலக்கியம்” என்று ஒரு stall இருந்தது. புத்தகம் படிக்க வசதியாக இருக்கைகள் இருந்தது (அதுல கால் வலி உள்ள பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்!). Air Cooler கூட இருந்தது, ஆனால் coolingதான் இல்ல!
இதையேல்லாம் படிச்சிட்டு நான் எதோ புத்தகப்புழு,,, புத்தக எலி என்று நினைக்கவேண்டாம். சுஜாதாவை தவிர வேறு யாருடைய எழுத்து நடையயும் அவ்வளவாக தெரிந்துவைக்காத ஒரு சராசரி புத்தக வாசிப்பாளன்.
கண்காட்சிக்கு வந்த நோக்கம் “After The Floods” என்ற புத்தகத்தை வாங்குவது. சென்ற வருடம் சென்னையில் எற்பட்ட வெள்ளம் மற்றும் அதன் பின் எழுந்த ”மனிதம்” பற்றிய ஒரு தொகுப்பு நூல். The Chennai Bloggers Clubபை சார்ந்தவர்கள் எழுதிய புத்தகம்.
வாங்கியாச்சி. வேற எதை வாங்க? ”புத்தக கண்காட்சியில் புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது”னு யாராவது ஒரு புத்தகம் எழுதினா தேவலை!
எத பண்ணாலும் plan பண்ணி பண்ணணும்
வருடம் முழுவதும் நாளிதழ்கள், வார/மாத இதழ்களில் வரும் புத்தக விமர்சனங்களைப் படிக்கும் போது, அதில் நமக்கு பிடித்த புத்தகங்களை தனியாக ஒரு லிஸ்டில் எழுதி வெச்சா நல்லது. இல்லாட்டி எத வாங்குவதுன்னு விழிக்கணும்.
கடைசி நாள் - 13th June, Monday.
Books I bought in this fair
- After The Floods – An Anthology on the Chennai Floods
- இந்திய விடுதலை போரில் பெண் போராளிகள் – கமலா தாஸ்குப்தா
- சாதி, வர்க்கம், மரபணு – ராஜன்
- Brahmans & Cricket – S Anand
No comments:
Post a Comment