Wednesday, April 27, 2016

படித்தவுடன் கிழித்து விடவும் - திருட்டு தம்


புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்.. 

இப்படி எழுதும்போதே டீ மாஸ்டர் குறுக்கிட்டார்.

தம்பி.. இப்படி sub-title போட்டு தொல்ல பண்ணாதீங்க. இத தான் எல்லா படத்துலயும் டிவீயிலயும் போடுறாங்களே.. நீங்க வேறயா

டீ மாஸ்டர் என்னோட தம்மடிக்கும் வரலாற கேட்க நான் எழுத ஆரம்பித்த முதல் வரியை அடிக்க சொல்லிட்டார்!

சரி நம்ம தொடருவோம். டீ மாஸ்டர் அவரோட வேலைகளுக்கு நடுவில் நான் எழுதுவதை அப்போ அப்போ எட்டி பார்த்து feedback சொன்னார்.

சின்ன வயசுல என் மாமாதான் எனக்கு ஹீரோ. கச்சேரி (orchestra) முடிஞ்சிட்டு நைட்டு அவரு வரும்போது பீடியும் கஞ்சா வாசனையும் கலந்து வரும். காலையில் அவரோட ரூம் ஜன்னல் கீழ பீடி துண்டுகள் இருக்கும்.

டீ மாஸ்டர்- ஓ அப்பொ முதலில் பீடிதான் போல ?

இல்ல மாஸ்டர் எச்சி பீடி. சும்மா வாயில வெச்சி ஊதிப்பார்ப்பேன் அவ்வளவுதான்.

காலேஜ்- எல்லா காலேஜ் போல எங்க காலேஜுலயும் கேரளா டூர் போனோம். என்னுடைய முதல் தம்மே இந்தியாவில் கடைகோடி எல்லையில்தான் ஆரம்பம்.

டீ மாஸ்டர்- என்ன ஒரு சரித்திர வாய்ந்த நிகழ்வு!! ச ச ச…

காலேஜில் நாங்க ஒரு அஞ்சு பேர்,,, நாங்க யாருக்கும் பயந்தவங்க இல்ல. உச்சா போணுமென்றாலும் ஒண்ணாதான் போவோம். நான், ரஜினி, கமல், அஜித் & விஜய் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இரவு ஒரு எட்டு-எட்ர மணி வாக்கில் கன்னியாகுமரியின் கடலை நோக்கி புறப்பட்டோம். கடற்கரையில் கால (leg’u) நினைக்கும் போது, யாரோ (வேறயாரு நான் தான்) தம்மடிக்கலாம் என்று சொல்ல. அஜித் & விஜய் ரெண்டு வெகுளி பசங்கள தம் வாங்கிட்டு வர அனுப்பினோம். பயலுங்க உஸார வெல கம்மியான சாதா சிகரேட்ட வாங்கி வந்தாங்க. 

”அடேய் இதுல மஞ்சளா ஒரு பக்கத்த காணோமே!”

”பரவாயில்ல விடுடா எதாவதொரு பக்கத்த பத்த வைப்போம்.”

கடலில் அடிச்ச காத்துல சிகரேட் பத்தவே இல்ல. எப்படியோ கஸ்டப்பட்டு ஒரு வழிய பத்தவெச்சோம். இழுக்கும் போது சிகரேட் துகள்கள் (தூயதமிழ்) வாய் உள்ள போய். து.. தூ...ன்னு துப்பி துப்பி ஒரு வழியா முடிச்சோம்.

டீ மாஸ்டர்- ஹிஹி.. சரி அப்போ இருந்து இந்த பழக்கம் தொத்திகிச்சா?

அப்போ கூட இல்ல மாஸ்டர்”னு சொல்லி டைம் பார்த்தேன். 

மணி 5:55

மாஸ்டர் 6 மணிக்கு கால் (மீட்டிங்) இருக்கு. இந்த பெப்பர் இங்கயே இருக்கட்டும். நான் கால் முடிச்சிட்டு வந்து மீதிய எழுதுறேன்.”

6:05 கான்பிரான்ஸ் ரூமுக்கு நுழையும் போது. டெக் லீடும், டெலிவரி மெனேஜர் ஆண்டியும் ஒக்கார்ந்திருந்தாங்க. ஒரு நியு ஜாயினி (new joinee) பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தான்.

சிக்ஸ் ஓ’க்லாக் கால், வாட் டைம் யூ கம் மேன்” என்று ஆண்டி ஆங்கிலத்தில் டென்சனானாங்க, தொடர்ந்து “சம் ஒன் ஸ்மோக்டு!!” என்று கேட்டாங்க.

நான் எதுவுமே சொல்லாம, பக்கதுல இருந்த அவாயா போனில் நம்பரை தட்டி, பிரிட்ஜ் (bridge) உள்ள போனோம். கலைண்ட்டுக்காக(client) காத்திருந்தோம்.

மணி 6:15 ஆச்சி….

6:25 ஆச்சி.. அரசியல், சினிமா, ஆபிஸில் நடக்குற கசமுசா,,, பேசினோம், ஆனா அந்த வெள்ளகார கலைண்ட் வரவேயில்ல. 6:30 மணிக்கு அந்த கலைண்டுக்கிட்ட இருந்து மீட்டிங் கியண்சல்டுன்னு ஒரு மெயில் வருது. அடுத்த ரெண்டாவது நிமிடம் ஆண்டி காரில் வீட்டுக்கு பறக்குறாங்க. டெக் லீட் தான் புதுசா வாங்கின காரை அலுங்காம கூலுங்காம ஓட்டிட்டுப்போறாரு. இதை நான் டீ கடையில் இருந்து பார்த்தேன்.

டீ மாஸ்டர்- என்ன தம்பி, உங்க மெனேஜர் புது கார் வாங்கிடாரா!

ஆமாம். ஆனா அவரும் என் மெனேஜர் இல்லண்ணே” சொல்லிட்டு என் கதைய எழுத உக்காந்தேன்.

டீ மாஸ்டர்- காலேஜ்லயும் இந்த பலக்கம் வரல, அப்போ எப்பதான் வந்துச்சி இந்த பலக்கம்.

எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான்ணே. அண்ணே அது “பலக்கம்” இல்ல “பழக்கம்”.. ழ ழ..”

”எதோ ஒண்ணு. நீ மேல சொல்லு”

”பார்த்தசாரதினு ஒருத்தன் என்கூட மொதல்ல வேலைப்பார்த்தான்.”

டீ மாஸ்டர்- அவன் டிருப்ளிக்கேன்னா?

”இல்ல மாம்பலம். அவன் கிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன்.”

டீ மாஸ்டர்- தம்பி, இந்த மாதிரி ஐடி கம்பெனி பக்கத்துல வெச்ச டீ கடை என்னிக்கும்மெ நஸ்டம்மானதில. இப்போ கார்ல போனாரே உங்க மெனேஜர் கரெக்ட்டா ஆப்பிஸுக்கு வரும்போது ஒரு தம், அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் களிச்சி ஒண்ணு, சாப்பாட்டுக்கு அப்புறமா ஒண்ணு, திரும்பவும் நாலு-அஞ்சி மணிக்கு ஒண்ணு, அப்புறம் வீட்டுக்கு போவும் போது ஒண்ணு. இதுக்கு நடுவுல எக்ஸ்டாரவ ஒண்ணு – ரெண்டு இருக்கும். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு ஆறிலிருந்து எட்டு வரை. இப்படி ஒரு 30, 40 பேர் வந்த நம்ம பொயப்பு நல்லா இருக்கும்.

அடேங்கப்ப, எண்ணாணே இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க.”

அத விடு. உன் கதய சொல்லு.

ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டுனு ஆரம்பிச்சி கிட்டத்தட்ட நீங்க சொன்ன அந்த கணக்குல தான் வந்து நின்னேன்.”

ஆமா வுட்டுல எப்படி. இப்படிதான் வெளிய பொய்ட்டு வந்து அடிப்பிங்களா!!” இப்படி டவுட்டா கேட்டார் மாஸ்டர்.

அட அது ஒரு கொடுமை. மொட்ட மாடியில் பொய் அடிக்கலாம். ஆனா அங்க இருட்ட இருக்கும். வெளிச்சத்துல அடிச்சாதான் பீல் (feel). பகல மொட்ட வெயில். ஏரியாவுல அடிக்க முடியாது. யாராவது பார்த்துடுவாங்க. சொ (so) அடுத்த ஏரியாவுக்குதான் போகனும். அந்த மெனேஜர் ஆதம்பாக்கதுல இருக்கரு, லீவு நாளுல தம்மடிக்க கிண்டிக்கு போவாரு!

மணி பார்தேன்… 7 மணி.. 

இன்னிக்கு அவ்வளவுதாண்ணே என் கதை.”

என்ன தம்பி இப்படி சட்டுன்னு முடிச்சிட்ட.”

இதுக்கு மேல எழுதின படிக்கற ஒண்ணு ரெண்டு பேர் கூட ஒடிப்போயிடுவாங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மாஸ்டரிடம் டீ குடிச்சதுக்கான எட்டு ரூபாய கொடுத்து எனது வெள்ளை குதிரையை (bike) ஸ்டார்ட் செய்தேன்.






No comments:

Post a Comment