இந்த கதை, நவகரகங்களாக இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்வாசிகள் (apartment) எப்படி பாரதவிலாஸாக மாறினார்கள் என்பதை பற்றியது.
ஒன்பது குடும்பங்கள் இருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் கிட்டத்தட்ட 5000 சதுர அடி இருக்கும். தரைத்தளத்தில் உள்ளவர்கள் எப்போதும் எதிரிகள். முன்னாள் செயலாளருக்கும் இன்னாள் செயலாளருக்கும் இடையே பனிப்போர். சிரிக்க சிரிக்க போசினாலும் எதிர்நிச்சல் சௌகார் ஜானகி போல ஜாடமாடையாக போட்டு வாங்குவார்கள். ஆண்களுக்கு பைக் பார்கிங் (bike parking) எப்போதும் பிரச்சனை, பெண்களுக்கு துணி காய வெய்க்கும் கொடிக்கு சண்டை. தலைமைச் செயலக செயலாளர் கூட தோத்துடுவாங்க, அப்படி ஒரு ரோல்ஸ் (Rules). போட்டிப்போட்டு டிவி சவுண்டு வெப்போம். இதில் ஒரு ஹால்லேலூயா குடும்பம் வேற. அப்பார்ட்மெண்ட் பில்டிங்க்கு repaint அடிப்பதுக்கூட இன்னும் ஒருமித்தக்கருத்துக்கு வராதவர்களை இந்த மழை ஒன்று சேர்த்து வைத்துவிட்டது!
முதலில் ஒன்று சேர்ந்தது, தரைத்தளத்தில் இருக்கும் இரு துருவங்கள். விடாமல் நான்கு மணி நேரம் கொட்டிய மழையால், தெருவில் இருந்து மழைநீர் வீட்டுக்குள் வந்தது. மணி அப்போது நள்ளிரவு 1 AM. ”சார், எல்லா திங்ஸயும் (things) எடுத்து மேல வெச்சிக்கோங்க..” என்று சொன்னதில் ஆரம்பமானது இவர்களின் லா,,லாஆ..லலாஆ..லா.
தரைத்தளத்தில் இருந்த மூன்று குடும்பமும், முதல் தளத்திர்க்கு தஞ்சம் புகுந்தனர். தென் கொரில்லா, சாரி தென் கொரியா – வட கொரியாவாக சண்டைப்போட்டவர்கள் விருந்தாளிகள் ஆனார்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு என்ன அஜித்-விஜய் பற்றியா பேச முடியும். நம் அரசியல்வாதிகளின் கையாலாகத்தனம் பற்றி ஒர் - இரு வார்த்தைகளை பேசிவிட்டு எல்லோரும் சத்தமில்லாமல் குறட்டைவிட அரம்பித்தனர். நிம்மதியாக உறங்கியவர்களும் அடுத்த நாள் முதுகேலும்புகள் உடைவதுபோல வேலை இருக்கும் என்று தெரியாது.
விடிந்ததும், பெரு மழைவிட்டது. தேருக்கள் ஆறாக மாறின. மெயின் ரோடு கடலாக மாறின. பானிபூரி கடை நடத்தும் பீகாரிகள் இந்த மழை வெள்ளத்தில் டீ, காபி விற்க ஆரம்பித்தார்கள்!. பால் packetகள் விற்பனை பறந்து, நம்ம அப்பார்மெண்டில் சமூக சமையல்! வீட்டுக்கு வீடு உணவுகள் பரிமற்றப்பட்டன.
4 PM – தேருவில் மழைநீர் வடியவேயில்லை. EB மீட்டர்கள் தண்ணீருக்குள் இருக்க, current வந்த என்ன ஆகும் என்ற விவாதம் கிளம்பியது. திடீர்னு power வர, ஆர்வ கோளாரு ஆண்டிகள் well water motor போடலாம் என்று புறப்பட, செயளாளர் shutter பொட்டு “யார் அங்கே, tester கொண்டு வாருங்கள்” என்றார். கேட்ட, கீழ நிக்குற தண்ணீயில் tester dip பண்ணிபாக்கலாம் என்றார். ங்ங்ங். நல்லவேளை அதுக்குள்ள power பொயிந்து. சபாஆஆ. விபரீத விளையாட்டு முடிவுக்கு வந்தது.
இருண்டதும் ஒளி பிறந்தது. தேருவில் மழைநீர் வடிய ஆரம்பித்தது. Current இல்லாத போது வீட்டில் இருக்கும் நீரை வேளியேற்றுவதற்க்கு ஒரே வழி பக்கேட்டில் (bucket) எடுத்து ஊத்துவதுதான். இது பாகீரத பிரயத்தனம். நம்மால் முடியும், நமக்கு நாமே என்று சொல்லி நாங்கள் எல்லோரும் இடுப்பில் கைலியும் கையில் வாலியுமாக புறப்பட்டோம்.
“..எ வரான்டா.. இவன் எம்.ஜி.ஆரும் பேரன்தாண்டா..” என்ற பாட்டை இந்த சீனுக்கு BGM போட்டுக்கோங்க.
பல ஆயிரம் பக்கேட்ஸ் (buckets) வெளியேறிய பின்பும் நீர் குறைந்ததாக இல்லை. தேருவில் பொறவங்க வரவங்க விதவிதமா ஐடியா கொடுத்தாங்க, சிலர் முடியாதுன்னு கிண்டல் அடிச்சாங்க. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உத்வேகம் கொடுக்க, தண்ணீர் பாதியாக குறைந்தது. காலையில் முற்றிலுமாக வடிந்தது. மழைக்கு முன் 2 – 3 அணிகளாக இருந்தவர்கள், இப்போது ஒர் அணியாக “நல்லதோரு குடும்பம்..” என்று பாட ஆரம்பித்தனர். இன்னும் எவ்வளவு நாள் இது தாக்கு பிடிக்குமோ!!