ஹே ராம் பற்றிய எனது முதல் மூன்று பதிவுகளை இங்கே படிக்கவும்.
மேலே இருக்கும் பதிவுகளை படித்து பிழைத்து இருந்தால் தொடர்ந்து படிக்கவும்.
**Spoilers Ahead**
தீடிர் சந்திப்புகள், கமலின் விதவிதமான முகங்கள், காட்சிக்கு காட்சி மாறும் மொழிகள், காந்தியம், மதச்சண்டை, நிகழ் காலம்-Black & White, கதை பின் நோக்கி செல்லும் போது-Color என்று பல தடைகளை தாண்டி வந்துவிட்டோம். இப்போது படம் முடியும் நிலை. அம்ஜத் இறந்துவிட்டான். நண்பனை இழந்தநிலையில் ராமின் மனம் மாறி காந்தியை கொல்லாமல் அவரிடம் மன்னிப்பு கேட்டக செல்கின்றான். காந்தியை கோட்சே சுடுகின்றான். படம் முடிகின்றது.
மனமாற்றம் நிகழ்ந்ததா?
எனக்கு முதல் இரண்டு தடவை பார்க்கும்போதும் அப்படி தோன்றவில்லை. அம்ஜத் கூறும் ஒரு வசனமும் காந்தி கூறும் ஒரு வசனமும் (கருத்து) ஒன்றாக உள்ளதை ராம் சுட்டிக்காட்டுவான். இதுதான் மனமாற்றத்திர்க்கு காரணமா ? கடைசியாக காந்தியை சந்திக்க போகும்போது ராம் செய்யும் காரியம்- Wash basin முன்னால் நின்று கொண்டு துப்பாக்கியை பெட்டியில் வைப்பது.
மன்னிப்பு கேட்க போகும் முன் துப்பாக்கியை உடைத்து (அல்லது dismantle) பெட்டியில் வைத்திருந்தால் காட்சி இன்னமும் நன்றாக புரிந்திருக்கும் என்பது எனது சிறிய முளையில் தொன்றிய ஒரு idea.
என்னதான் குற்றம் குறைகள் சொன்னாலும் ஹே ராம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய படம். நாம் கொண்டாடினோமா ?
தர்க்க ரீதியாக சிந்திக்க வைத்த பதிவுத் தொடர் சகோ
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM
வருகைக்கு நன்றி
Delete