படம் ஆரம்பிக்கும்போது சாலியரி (Salieri) என்ற ஒரு வயதனவரின் அரையை இரண்டு வேலையாட்கள் கதவைத்திறக்க சொல்லி தட்டுகின்றார்கள்.
பின்னனியில் சாலியரியின் குரல் “Mozart… என்னை மன்னித்துவிடு.. நான் தான் உன்னை கொன்றேன்..”.
அரையின் உள்ளே பெரிய சத்தம். வேலையாட்கள் கதவை உடைத்து உள்ளே செல்ல, கழுத்தை அருத்த நிலையில் இருக்கும் சாலியரியை உடனே ஒரு குதிரை வண்டியில் எற்றி hospital-லுக்கு அழைத்து செல்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஒரு மாளிகையில் இசை விருந்து நடந்துக்கொண்டிருக்கின்றது. இசை வரும் திசையை நோக்கி சாலியரி ஆதங்கத்துடன் பார்த்து வண்டியில் செல்கின்றான்.
அந்த இசை அப்படியே மருவி, நம் எல்லோருக்கும் ரொம்ப தெரிந்த Titan watch விளம்பரத்தில் வரும் “பா.. பப்பா.. பா. பப்பா.. பா..” என்ற இசையாக மாறுகின்றது. அடுத்த நாள் காலை ஒரு பாதரியார் சாலியரியை பார்க்க hospital-லுக்கு வருகின்றார்.
என்னை தனியே விடு என்று சாலியரி கூற, பாதரியார் மறுக்கின்றார்.
“இசை பற்றி உனக்கு என்ன தெரியும்?” சாலியரி கேட்கிறான்.
பாதரியார் தம் சிறு வயதில் இங்கு வியன்னா-வில் (Vienna) படித்ததாக கூறுகின்றான்.
அப்படியானால் இதை தெரியுமா? என்று கூறிக்கொண்டு அருகில் இருக்கும் piano-வில் ஒரு tune-னை வாசிக்கின்றான் சாலியரி.
பாதரியார் தெரியாது என்று முழிக்கின்றார்.
எமாற்றம் அடைந்த சாலியரி “செரி, இதை கேள், இதை நான் முதலில் அறிமுகம் செய்யும் போது அரங்கமே அதிர்ந்தது” என்று கூறிக் கோண்டு வேறு ஒரு tune-னை வாசிக்க. அப்படியே shot சாலியரியின் இளமை காலத்திர்க்கு சென்று அரங்கம் நிரைந்த மக்கள் கரவொலியோடு காட்சி நிகழ் காலத்திர்க்கு வருகின்றது. பிரம்மிப்பும் மிரட்சியோடும் வாசித்த கையோடு பாதரியாரை பார்கின்றான் சாலியரி. ஆனால் பாதரியரின் முகத்தில் அதே முழி.
என்னுடைய இசை உனக்கு எதுவுமே தெரியாத ? 40-துக்கு மேற்பட்ட opera-க்களை எழுதியுள்ளேன். அக்காலத்தில் Europe-ன் மாபெரும் இசைக்கலைஞன் நான். செரி, இதை கேள் என்று நாம் முன்னர் கேட்ட Titan watch விளம்பர tune-னை வாசிக்க பாதரியார் முகத்தில் புன்னகை. அவரும் piano இசையுடன் செர்ந்து notes-சை hum செய்கின்றார். பாதரியாரிடம் ஒரு வித மலர்ச்சி, அப்பாட கடைசியாக இவருடைய இசையை நாம் கண்டுபிடித்துவிட்டோம் என்பதுபோல.
ஒ!! இது எனக்கு தெரியும். இதை நீங்களா எழுதினிர்கள் ? Wonderful என்கிறார் பாதரியார்.
சாலியரியோ, இதை நான் எழுதவில்லை. இதை எழுதியது Mozart என்று கூறுகின்றான். இப்படி ஆரம்பிக்கும் இப்படத்தின் நாயகன்தான் Amedeus Mozart. ஆனால் கதை சொல்லப்படுவது அவனுடைய எதிரி சாலியரியின் வழியாக.
1984-ஆம் ஆண்டு வெளிவந்த Amedeus முதலில் ஒரு நாடகமாக வந்தது. Peter Shaffer எழுதிய இந்த நாடகம் (படத்திர்க்கு திரைகதை) Mozart-ன் வாழ்க்கையை பின்னனியாக வைத்து கொஞ்சம் தாராளமாக fiction-னையும் சேர்க்கப்பட்டுள்ளது. Czechoslovakia-வை சார்ந்த Milos Forman இயக்கிய இப்படம் பல Oscar விருதுகளை அள்ளியது. என்னத்தான் இப்படத்தை அப்பொது கொண்டாடினாலும், பின் நாளில் மறந்துவிட்ட அல்லது கவனிக்கதவறிய வரிசையில் வந்துவிட்டது. ஆகையால் FilmBulb இதை தூசி தட்டி கொஞ்சம் எழுதவுள்ளது.
No comments:
Post a Comment