Sunday, May 17, 2015

Bharath Stores (India, 2012)



இதை தமிழில் தான் எழுதவேண்டும். என்னென்றால் இது இந்தியப்படம், அதுவும் நம்ம பக்கத்து மாநிலம் கர்னாடகாவிலிருந்து வெளிவந்தப் படம். பொதுவாக சமகாலத்து நிகழ்வுகளை படமாக எடுக்கமாட்டார்கள். எதற்கு வேண்டாத தலைவலினு. இல்லனா ஒரு ஜனரஞ்சகமான படத்தை எடுத்து அதுல தொசை மேலத் தூவுன மொளகப்போடி போல ஒரு சமகாலத்துப் பிரச்சனையா பூசுனாப்புல சொல்லிட்டு போயிடுவாங்க. ஆனா Bharath Stores நேரடியா கதையோட மையப்புள்ளியில் டிராவல்லாகுது.

பெரிய shopping complex மற்றும் mall-கள் வந்துவிட்ட நிலையில் சிறிய மளிகை கடைகள் என்ன ஆகும் என்பதை ஒரு கதையோடு சொல்வதுதான் இந்தப் படம். (Written & Directed by Sheshadri)

பாரதியும் (Sudharani) அவள் கணவரும் (Gurudutt- கமலின் கலைஞன் படத்தில் வரும் வில்லன்) ஆமெரிகாவில் இருந்து பெங்களுருக்கு வருகிறார்கள். பாரதி கோவிந்த ஷெட்டியை (Dattareya) தேடி வருகின்றாள். பாரதியின் தந்தை கோவிந்த ஷெட்டியிடம் பட்டக் கடனை அடைக்க வருகின்றாள். கோவிந்த ஷெட்டி Bharath Stores என்ற மளிகை கடையின் முதலாளி. ”Bharath Stores bus stop”-பை கண்டுபிடிக்கிறாள், ஆனால் அங்கு Bharath Stores கடை இல்லை. அக்கம் பக்கம் விசாரித்தாலும் யாருக்கும் தெரியவில்லை. ஒருவழியாக கடையில் வேலை செய்த சந்துரு மற்றும் மஞ்சுநாத்தை (இந்தப் பெயர் இல்லாமல் கன்னடப்படமே இருக்காது!) சந்திக்கிறாள். அவர்கள் கோவிந்த ஷெட்டியிடம் வேலை செய்த அனுபவம், ஷெட்டியின் குடும்ப சர்ச்சை மற்றும் கடையில் எப்படி வியாபரம் படுத்தது என்று கூற, கதை கடந்த காலம், நிகழ் காலத்திற்க்கும் மாறி மாறி பயணிக்கிறது. ஷெட்டியை பாரதி சந்தித்து கடனை திருப்பிக் கொடுத்தாளா என்பது கதை.

காலப்போக்கில் மாற்றம் இன்றியமையாதது தான், அதை எற்க மறுத்தவன் அழிந்துப்போவன். ஆனால் அரசாங்கமோ பெருநிறுவனங்களோ மக்களின் மீது அவர்களுக்கு தெரியாமல் ஆசையை விதைப்பது அந்த மாற்றத்தை வேகமடைய செய்து மனிதர்களின் மனித்தன்மையை இழக்க செய்கிறது.

எல்லா சிறு மளிகைக்கடைகளும் பாதிப்பு அடைவதில்லை, ஆனால் மால்களின் காட்டாற்று வெள்ளத்தில் Bharath Stores போன்ற கடைகள் அடித்து செல்லப்பட்டிருப்பது உண்மை. 

Retail, wholesale, packed foods, IT மற்றும் பெருநிறுவனங்களில் குடுக்கப்படும் food & grocery coupon, விளம்பர உக்திகள், credit card, தேவையற்ற பொருள்களை வாங்குவது போன்ற எல்லாவிதமான நவீன கலாசரங்கள் பற்றியும் கதையோடு சொல்கிறது Bharath Stores.

Torrent-ல் இருக்குதா என்று தெரியவில்லை. எப்போயாவது DD National, Lok Sabha, Rajya Sabha அல்லது DD Bharathi போன்ற TV Channel-களில் பார்க்கலாம்.

YouTube Trailer




No comments:

Post a Comment