சில பேர் வாங்குவாங்க, சிலரு வாங்கிட்டு கொஞ்ச தூரம் போனவுடனே கீழ போட்டுட்டு போவாங்க, சிலரு வாங்கியவுடனே என் முன்னாலயே கசக்கி கீழ போடுவாங்க, சிலர் நான் நிப்பத கொஞ்ச தூரத்துல இருந்து பார்த்து தள்ளி நடக்க ஆரம்பிப்பாங்க, சிலரு வாங்காம கையாலயே வேணாம்முன்னு signal பண்ணிட்டு போவாங்க.
ஒரு நாள் பெருங்கொளத்தூர், ஒரு நாள் Tidel park, ஒரு நாள் MEPZ, ஒரு நாள் கிண்டி Olympia. வாரத்துல 5 நாள் வேல. காலையில ஒரு எடம், சாயங்காலம் ஒரு எடம். காலையில எல்லோரும் வேலைய ஆரம்பிக்கும்போது என் வேல முடிஞ்சிடும். என்னோட target ஒரு வேளைக்கு 200 pamphlet கொடுக்கணும். ஆமாம் நீங்க விறுவிறுன்னு office உள்ள நுழையும்போது, உங்க கையில வலுக்கட்டாயமா pamphlet திணிபாரே அவருதான் நான்.
வேலைக்கு பேரு- Marketing Executive. நல்லா இருக்கு. ஆனா நாய் பொழப்புனு சொன்னா கூட நல்ல இருக்கும். இது அதுக்கும் மேல. வேல முடிஞ்சி, பஸ் பிடிக்க stopக்கு போகும் போது, road ஓரத்துல நான் கொடுத்த pamplets விழுந்து கெடக்கும். அப்போ என்னோட mindல “அய்யோ நான் கொடுத்த பால் எல்லாம் இப்படி ரத்தமா ஓடுதே”னு தோணும்.
அதோ அந்த பையன் வரான். அவன் கையில file இருக்கு… உள்ள resume இருக்கும் போல. ஏதோ ஒரு companyல interview முடிச்சிட்டு வரான்போல. அவன்கிட்ட இந்த real estate apartment ad pamphlet கொடுத்தா என்ன நினைப்பான்? சரி அவன் கனவுக்கு கொஞ்சம் தண்ணீ ஊத்துவோம்.
அடுத்ததா அந்த ஆளு.. நல்ல smartஅ இருக்காரு. இங்க ITல வேல செய்யிறத விட்டு..இருவரு எதாவது சினிமாவில் நடிக்கலாம். ஆனால் அமெரிக்க மாப்புள ரோல்தான் கிடைக்கும்.
இப்போ ஒரு ஜோடி வராங்க. யாரு கையில கொடுக்கலாம்??? சரி அந்த பொண்ணுதான் என் sideல வாரா.. அவங்கிட்டயே தரலாம். அவுங்க பக்கத்துல வர வர, நான் அந்த பெண்கிட்ட pamphlet நீட்டுரேன். அந்த பையன் முந்திக்கிட்டு வாங்கிட்டான். என் mind voice- டேய், நான் என்ன அந்த பொண்ணுக்கு love letterராட கொடுக்குறேன்.. இவ்வளவு possessiveவாக இருக்கான்.
அந்த phone பேசிகிட்டே வர ஆண்டி. Horlicks விளம்பரத்துல வர மாதிரி இருக்காங்க. பெரிய managerஆ! இருப்பாங்க போல! Officeல வண்டி கொடுக்கலியா? ஓ.. call taxiல போறாங்க போல. Left கையால் நான் கொடுத்த paperர அலச்சியமா வாங்கிட்டு போனாங்க. ச்ச.. Perfume வாசனை நல்லாவேயில்ல.
இப்படிதான் வாழ்க்க போகுது… ஒரு நாள் நான் கொடுத்த pampletட ஒருத்தார் வாங்கினாரு. நிதானமா அதை படிச்சாரு. என்னை பார்த்து ஒரு சின்னதா சிரிச்சாரு. என்ன விட்டு நடக்க ஆரம்பிச்சவரு, அவர் கூட வர நண்பர் கிட்ட, “நாம உள்ள உக்காந்து prospectsக்கு mailல flyers.. atttachmentsல அனுப்புவதை இவர் ரோட்டுல செய்யிராரு”, என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தாங்க. என் mobile எடுத்து prospectsனா என்ன என்று தேட ஆரம்பிச்சேன்.
***